பிக் பாஸ் ஜனனிக்கு அடித்த ஜாக்பாட்!.. லியோவில் விஜய்யுடன் இப்படியொரு ரோலில் நடித்துள்ளாரே!..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படத்தில் பிக் பாஸ் நடிகை ஆனா ஷிவானி நாராயணன், மைனா மற்றும் மகேஸ்வரி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்நிலையில், லியோ திரைப்படத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஜனனிக்கு முக்கியமான கதாபாத்திரம் கிடைத்துள்ளது.

காஷ்மீரில் நடத்தப்பட்ட படப்பிடிப்பில் நடிகர் விஜயுடன் கூடவே நடிக்கும் காட்சியில் பிக் பாஸ் ஜனனி நடித்து ஸ்கோர் செய்துள்ளார்.

F8y5MemacAA7tzM

லியோவில் பிக் பாஸ் ஜனனி:

விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பல பிரபலங்களுக்கும் சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. ஆனால், அதை எந்த அளவுக்கு சரியாக பயன்படுத்துகின்றனர் என்பதைப் பொறுத்து தான் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமையும்.

பிக் பாஸ் ஷிவானி நாராயணன் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கும் மனைவியாக நடித்திருந்தார். இந்நிலையில் லியோ படத்தில் நடிகர் விஜய் நடத்தும் பேக்கரியில் பணிப்பெண்ணாக பிக் பாஸ் ஜனனி நடித்துள்ளார்.

F8y5NZua0AA RcQ

விஜய்யுடன் பல காட்சிகள்:

ஜனனிக்கு திருமணம் செய்து வைக்கும் காட்சிகள், சாண்டி மாஸ்டரிடமிருந்து ஜனனியை காப்பாற்றும் காட்சி என தனக்கு கிடைத்த அரிய வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்தி ஜனனி நடித்த அசத்தியுள்ளார்.

லியோ திரைப்படம் வெளியான நிலையில் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய் மற்றும் த்ரிஷாவுக்கு நன்றி தெரிவித்து படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை முதன்முறையாக சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

போட்டோக்களை பகிர்ந்துள்ளார்:

ஜனனி லியோ படத்தில் நடிப்பது குறித்த தகவல்கள் ஏற்கனவே கசிந்தாலும், அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு புகைப்படத்தையும் வெளியிடாமல் இதுவரை பாதுகாத்து வந்திருந்தார். லியோ படத்தில் நடித்த பிக்பாஸ் ஜனனிக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகை லாஸ்லியா, ஷிவானி நாராயணன் போல தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு ஜனனிக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லியோ திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வந்தாலும், விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாகவே படம் அமைந்துள்ளது. முதல் பாதி தாறுமாறாகவும், இரண்டாம் பாதியில் ஆக்‌ஷன் காட்சிகள் அனல் தெறிக்கும் விதமாகவும் உள்ளன. கண்டிப்பாக அடுத்த 6 நாட்களில் லியோ மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தும் என தெரிகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...