கே.பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான ‘தண்ணீர் தண்ணீர்’ என்ற திரைப்படத்தில் வாத்தியார் என்ற கேரக்டரில் நடித்தவர் தான் ஆர்.கே.ராமன். இந்த படத்தின் உள்ள காமெடி காட்சிகளுக்கும், கன்னத்தில் அறையும் வகையில் எழுதப்பட்ட வசனங்கள் பேசுவதிலும் அவரது கேரக்டர் பெருமை பெறும்.
கே.பாலச்சந்தர் இந்த கேரக்டரை பார்த்து பார்த்து வடிவமைத்திருப்பார். ‘தண்ணீர் தண்ணீர்’ படத்தில் நடித்த வாத்தியார் ராமன் பள்ளி காலங்களில் நாடகங்களுக்கு கதை, வசனம் எழுதியவர். இவர் எழுதிய பல நாடகங்கள், கட்டுரைகள் பிரபல பத்திரிகைகளில் வெளியாகி உள்ளது.
ஒரே நாளில் வெளியான பாலசந்தர் – பாரதிராஜா படம்.. ஒருவருக்கு வெற்றி.. இன்னொருவருக்கு முதல் தோல்வி..!!
ஆரம்ப கட்டத்தில் நாடகத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதிக் கொடுத்த ராமன், அதன் பிறகு ஒரு சில நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவரது நடிப்பு, நாடகத்தை பார்க்க வந்த பார்வையாளர்களுக்கு பிடித்து விட்டதை அடுத்து தொடர்ந்து அவர் நாடகத்தில் நடித்தார்.
ஒரு கட்டத்தில் இவர் ‘சேவா ஸ்டேஜ்’ என்ற நாடக குழுவில் இணைந்து அந்த நாடக குழுவின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டார். இந்த நாடக குழுவின் மூலம் தான் கோமல் சுவாமிநாதனின் பல நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. அதன் பின் அந்த நாடகங்கள் திரைப்படமாகவும் மாறியது.
இந்த நாடக குழுவில் இணைந்த ராமன், கோமல் சுவாமிநாதன் அவர்களுக்கு உதவியாளராகவும், நாடக குழுவின் மேற்பார்வையாராகவும் பணிபுரிந்தார். அவரது திறமையான நிர்வாகம் காரணமாக அந்த நாடக குழு நல்ல லாபத்தை பெற்றது.
கே.பாலசந்தர் படத்தில் அறிமுகம்.. கமல் ரஜினியுடன் நடிப்பு.. நடிகர் திலீப் திரை பயணம்..!
அப்போதுதான் அவருக்கு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான ‘தண்ணீர் தண்ணீர்’ என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் அவரது பெயர் வாத்தியார் ராமன் என்றே ரசிகர்களால் அழைக்கப்பட்டார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய புகழை பெற்றுக் கொடுத்த பின்னர் அவர் பல படங்களில் குணச்சித்திர கேரக்டரில் நடித்தார்.
‘தண்ணீர் தண்ணீர்’ வெற்றிக்கு பிறகு முரளி நடித்த ‘துளசி’, ‘பூவிலங்கு’, கோமல் சுவாமிநாதன் இயக்கிய ‘ஒரு இந்திய கனவு’, ‘அனல் காற்று’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். அதன் பிறகு தேசிய விருது பெற்ற ‘ஏழாவது மனிதன்’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார்.
சில ஆண்டுகள் கழித்து கார்த்திக் நடித்த ‘வணக்கம் வாத்தியாரே’ என்ற திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு விஜய் நடிப்பில் உருவான ‘காலமெல்லாம் காத்திருப்பேன்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் தான் அவர் நடித்த கடைசி படம்.
தண்ணீர் பிரச்சனையை தைரியமாக சொன்ன ஒரே இயக்குனர்.. ‘தண்ணீர் தண்ணீர்’ உருவான கதை..!
எழுத்தாளர், நாடக கதாசிரியர், நடிகர், நாடக ஒருங்கிணைப்பாளர் என பல்வேறு அவதாரங்களில் தனது திறமையை நிரூபித்த வாத்தியார் ராமன் அவர்கள் 2011-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காலமானார். அவர் மறைந்தாலும் அவர் நடித்த ஒரு சில படங்களின் காட்சிகள் இன்னும் ரசிகர்கள் மனதில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.