எந்தக் கதாபாத்திரமானாலும் சரி… பட்டையைக் கிளப்பி விடுவதில் நடிகைகளில் இவரை மிஞ்ச ஆள் இல்லை…!

By Sankar Velu

Published:

படையப்பாவில் நீலாம்பரியாக வந்து சூப்பர்ஸ்டார் ரஜினிக்கே டஃப் கொடுத்து நம்மை கதிகலங்கச் செய்தவர் ரம்யா கிருஷ்ணன். இவர் நடிப்பில் சூரப்புலி. கமலுடன் இவர் நடித்த படம் பஞ்சதந்திரம்.

செம கியூட் அண்டு மாஸ் நடிகைன்னா அது இவர் தான். இவர் என்ன படத்தில் நடித்தார் என்பதை விட இவர் நடித்த பாத்திரமே நம் கண் முன் இன்று வரை நிற்கும். அது தான் நீலாம்பரி, ராஜமாதா. இவரது வாழ்க்கை வரலாற்றைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.

இவர் 1970ல் சென்னையில் பிறந்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தின்னு பன்மொழிப்படங்களில் கிட்டத்தட்ட 200க்கும் மேல் நடித்து அசத்தியுள்ளார்.

Ramyakrishnan Kamal
Ramyakrishnan, Kamal

15வது வயதில் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்தார். தற்போது 38 வருடங்கள் உருண்டோடி விட்டன. இன்னும் தனது கேரக்டரை மெருகூட்டும் விதத்தில் தான் நடித்து வருகிறார். இவரது மாமனார் தான் பிரபல நகைச்சுவை நடிகர் சோ. துக்ளக் பத்திரிகை ஆசிரியரும், பிரபல அரசியல் விமர்சகருமான சோ.

1983ல் வெள்ளை மனசு படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு ஜோடியாக நடித்து அறிமுகம் ஆனார். அப்போது இவர் 8ம் வகுப்பு தான் படித்துக் கொண்டு இருந்தார்.

கதாநாயகி, வில்லி, குடும்பப் பாங்கான வேடம், கவர்ச்சி, ஒரே ஒரு பாடலுக்குக் குத்தாட்டம், அம்மன் வேடம், பேய் என எந்த வேடத்தைக் கொடுத்தாலும் கனக்கச்சிதமாக நடித்துக் கொடுப்பார். பரதநாட்டியம், குச்சிப்புடி என டான்ஸிலும் தனித்திறமையைக் காட்டுவார்.

Neelaampari in Padayappa 1
Neelaampari in Padayappa

ராஜமாதாவாக பாகுபலியில் வந்து அசத்தியிருந்தார். அதே நேரத்தில் துணை கதாபாத்திரமாகவும் நடித்து தாய்மார்களின் பேராதரவைப் பெற்று விடுவார். இவரின் திறமைக்கு மற்றும் ஒரு சான்று சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான குயின் படம். இன்னும் இவரைப் பற்றி எத்தனையோ விஷயங்கள் சொல்லிக் கொண்டே போகலாம்.

இவரது நடிப்பில் படிக்காதவன், பேர் சொல்லும் பிள்ளை, தம்பி தங்க கம்பி, மீனாட்சி திருவிளையாடல், கேப்டன் பிரபாகரன், பட்ஜெட் பத்மநாபன், திருநெல்வேலி, ஸ்ரீ ராஜராஜேஸ்வரி, ராஜகாளி அம்மன், பாகுபலி, சூப்பர் டீலக்ஸ், தானா சேர்ந்த கூட்டம் உள்பட பல வெற்றிப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார். இவர் எந்தக் கேரக்டர் கொடுத்தாலும் அதில் தனது தனித்திறமையைக் காட்டி அசத்தி விடுவார்.

Ramya Krishnan as Amman 1
Ramya Krishnan as Amman

2003ல் கிருஷ்ணவம்சி என்ற தெலுங்கு இயக்குனரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. 2017ல் தெலுங்கில் இவர் நடித்த ஜெகன்மாதா படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இவர் கடைசியாக நடித்த படம் உயர்ந்த மனிதன். இது பாலிவுட்டில் தேரா யார் ஹ_ன் மெயின் என்ற பெயரில் வெளியானது. இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளனர். 2020ல் வெளியானது.

2022ல் ரவி போபன்னா என்ற கன்னடப்படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படங்களில் இதுவும் ஒன்று. ரம்யா கிருஷ்ணன் விதவிதமான சேலைகள் அணிவதை மிகவும் விரும்புவார்.

இவரது மாமனார் தான் பிரபல நகைச்சுவை நடிகர் சோ. துக்ளக் பத்திரிகை ஆசிரியரும், பிரபல அரசியல் விமர்சகருமான சோ.