நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் மெகா ஹிட் அடித்தது. பீஸ்ட் வசூல் ரீதியாக வெற்றியடைந்ததாலும், படம் எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை .
எனவே நெல்சன் பீஸ்ட்-க்கு பிறகு, பல விமர்சனங்களுக்கு உள்ளானார். அவை, அனைத்தையும் ஜெயிலரின் வெற்றி மறக்கச் செய்துள்ளது. சமீபத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ஜெயிலர் படத்தை மியூசிக் இல்லாமல் பார்த்தேன். சுமாராகத்தான் இருந்தது. பிறகு மியூசிக் சேர்த்தபின் பார்த்தபோது தான் படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை கிடைத்தாக கூறினார். அந்த பெரும்பாராட்டுக்கு சொந்தக்காரர் அனிருத்தான்.
சூப்பர் ஸ்டார் கூறியது என்னவோ நிஜம்தான். விக்ரம், பீஸ்ட் மற்றும் ஜெயிலர் போன்ற படங்களில் அதன் அதிரவைக்கும் இசை தியேட்டரையே குஷி படுத்துகிறது. சாதாரண காட்சிகள் கூட அவரின் இசையால், கூடுதல் விறுவிறுப்பைக் கொடுக்கிறது.
அந்தப் பெருமை அனிருத்தையேச் சேரும். தொடர் வெற்றி படங்களை கொடுத்து வரும் அனிருத் 2012ல் முதல் முறையாக ‘ஒய் திஸ் கொலவெறி’ என்ற பாடல் மூலம் உலகம் முழுவதும் ஃபேமஸ் ஆனார்.
அப்போதுதான் ‘யூடியூப்’ பிரபலமடையத் தொடங்கியிருந்தது. அதனால், எல்லோரும் அந்த பாடலை கேட்கத் தொடங்கினார்கள். ‘எதிர்நீச்சல்’, ‘வணக்கம் சென்னை’, ‘இரண்டாம் உலகம்’ உள்பட சில படங்களுக்கு இசையமைத்து வந்தார்.
பின், 2014ல் வெளியான கத்தி படம் அனிருத் கேரியருக்கு திருப்புமுனையாக அமைந்தது. ‘தர்பார்’, ‘மாஸ்டர்’, ‘டாக்டர்’, ‘பீஸ்ட்’, ‘டான்’, ‘விக்ரம்’, ‘திருச்சிற்றம்பலம்’ மற்றும் ‘ஜெயிலர்’ என தமிழில் தொடர்ந்து பல ஹிட் பாடல்களைக் கொடுத்து கொண்டிருந்தார் அனிருத்.
தற்போது ஹிந்தியிலும் தன்னுடைய கால் தடத்தைப் பதித்துள்ளார் அனிருத். ஷாருக்கான் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் ‘ஜவான்’ வெளியானது. இந்தப் படத்தின் பாடல் மற்றும் பின்னணி இசை ஹிந்தியிலும் அனிருத்துக்கு ரசிகர்களை உருவாக்கியுள்ளது. அக்டோபர் 19ல் பெரும் எதிர்பார்ப்புடன் தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ‘லியோ’ அதிலும் ‘ராக்ஸ்டார்’ அனிருத் தான் இசை.
2025ம் ஆண்டு வரை அனிருத் தொடர்ந்து கமிட் ஆகியிருக்கும் படங்கள் அனைத்துமே டாப் ஸ்டார்களின் படங்கள். முன்னணி இசையமைப்பாளர்கள் பலருக்கும் டஃப் கொடுக்கும் அனிருத் இந்த தலைமுறையின் ‘ராக்ஸ்டார்’.