விஜயகாந்த் நடித்த ஒரு திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் சங்கர் கணேஷ் இரட்டையர்கள் என மொத்தம் மூன்று பேர் இசையமைத்தார்கள் என்றால் அதுதான் ஆட்டோ ராஜா. விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1982 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆட்டோ ராஜா.
இந்த படத்திற்கு இசையமைக்க முதலில் சங்கர் கணேஷ் ஒப்பந்தமான நிலையில் அவர் ஐந்து பாடல்களை கம்போஸ் செய்து கொடுத்தார். இதன் பிறகு சங்கர் கணேஷ் இரட்டையர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இளையராஜா ஒரு பாடலை கம்போஸ் தந்தார். சங்கத்தில் பாடாத என்ற ஒரு பாடலை இளையராஜா இசையமைத்து தந்ததோடு அவர் எஸ் ஜானகியுடன் இணைந்து பாடியும் கொடுத்தார்.
சிவாஜியின் நடிப்பை பார்த்து மிரண்டு போன பிரம்மாண்ட ஹிந்தி நடிகர்..!
இந்த படம் விஜயகாந்த் நடிப்பில் உருவான வெற்றி படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் கதை என்னவெனில் விஜயகாந்த் மற்றும் ஜெய்சங்கர் ஆகிய இருவரும் நண்பர்களாக இருப்பார்கள். இருவருமே ஆட்டோ ஓட்டும் தொழிலில் இருப்பார்கள். இந்த நிலையில் விஜயகாந்த்துக்கும் அந்த ஊரின் பணக்கார தொழிலதிபர் சங்கிலி முருகனின் மகள் காயத்ரிக்கும் காதல் உண்டாகும்.
தமிழ் திரைப்பட வழக்கப்படி முதலில் இருவருக்கும் மோதல் உண்டாகி அதன் பிறகு காதல் உண்டாகும். இந்த நிலையில் தனது மகளின் காதலை மறக்க எவ்வளவு பணம் வேண்டும் என்று விஜயகாந்த்திடம் சங்கிலி முருகன் பேரம் பேசுவார். இதனை அடுத்து ஒரு லட்ச ரூபாய் கொடுத்து காதலை மறந்துவிடுமாறு கூறுவார்.
விஜயகாந்த் அந்த பணத்தை வாங்கி சென்று விட்ட நிலையில் தேங்காய் சீனிவாசன் மகனுக்கு தனது மகளை மணமுடிக்க திட்டமிடுவார். இந்த நிலையில் சங்கிலி முருகன் கொடுத்த ஒரு லட்ச ரூபாயில் ஒரு நெக்லஸ் வாங்கி தனது காதலி காயத்ரி கழுத்தில் அணிந்திருப்பார். இதைக் கேட்டவுடன் அதிர்ச்சி அடையும் சங்கிலி முருகன், விஜயகாந்த்தை தீர்த்துக் கட்ட முயற்சி செய்வார்.
வைகைப்புயல் வடிவேலுடன் நடித்த துணை நடிகை புளியோதரை சுமதியின் வாழ்க்கையில் இவ்வளவு சோகங்களா?
இந்த நிலையில் தேங்காய் சீனிவாசன் மகன் ஜெய்சங்கரின் தங்கையை காதலிப்பது போல நடித்து பாலியல் பலாத்காரம் செய்திருப்பார். விஜயகாந்த் மற்றும் ஜெய்சங்கர் ஆகிய இருவருக்கும் வில்லனாகிய சங்கிலி முருகன் மற்றும் தேங்காய் சீனிவாசன் ஆகிய நண்பர்களை எப்படி பழி வாங்குகிறார்கள் என்பது தான் இந்த படத்தின் கதை.
இந்த படத்தில் ஒரு கட்டத்தில் விஜயகாந்தை சங்கிலி முருகன் சவுக்கால் அடிப்பார். விஜயகாந்த் அமைதியாக அந்த அடிகளை வாங்கி கொள்வார், ஒரு கட்டத்தில் சங்கிலி முருகன் சோர்வடையும்போது சில நிமிடங்கள் ரெஸ்ட் எடுத்து அதன் பின் மீண்டும் அடியுங்கள் என்று கூறும் காட்சி திரையரங்கில் கைத்தட்டல் பெரும்.
அதேபோல் சங்கிலி முருகன் கொடுத்த ஒரு லட்ச ரூபாயை வைத்து அவரது காதலிக்கு தங்க சங்கிலி வாங்கி கொடுக்கும் காட்சியும் படத்தில் ரசிக்கும் வகையில் இருக்கும். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக உருவானது. விஜயகாந்த் மற்றும் ஜெய்சங்கர் ஆகிய இருவருமே சிறப்பாக நடித்திருப்பார்கள்.
இந்த படம் ஆட்டோ ராஜா என்ற பெயரில் கன்னடத்தில் உருவான தமிழ் ரீமேக் படம். கன்னடத்திலும் நாயகியாக காயத்ரி தான் நடுத்திருப்பார். இந்த படத்தை கே விஜயன் இயக்கியிருப்பார். இந்த படம் வசூல் அளவில் நல்ல வரவேற்பு பெற்று விஜயகாந்த்தின் வெற்றி படமாக அமைந்தது.