வைகைப்புயல் வடிவேலுடன் நடித்த துணை நடிகை புளியோதரை சுமதியின் வாழ்க்கையில் இவ்வளவு சோகங்களா?

பொதுவாக தமிழ் சினிமாக்களில் ஆக்சன் திரைப்படங்களுக்கு இணையாக காமெடி படங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது உண்டு. அந்த காலத்தில் நாகேஷ் அவர்களின் காமெடியில் தொடங்கி இந்த காலத்தில் யோகி பாபு அவர்களின் காமெடி வரை காமெடிக்கு என தனி ரசிகர் கூட்டமே இருந்து வருகிறது.

அதிலும் கவுண்டமணி – செந்தில் காமெடிகளை யாராலும் மறக்க முடியாது. இன்றளவும் பெரும்பாலான இளைஞர்கள் அவர்களின் காமெடி டயலாக்குகளை வைத்துத் தான் பிறரை கலாய்த்து வருகின்றனர். அந்த வகையில் கவுண்டமணி -செந்தில் அவர்களுக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாக வலம் வருபவர் வைகைப்புயல் வடிவேலு.

வைகைப்புயல் வடிவேலு அவர்களின் காமெடிக்கு சிரிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. படித்தவர்கள் முதல் படிக்காத பாமர மக்களுக்கும் அவரது காமெடி எளிதாக சென்றடையும் வகையில் எளிமையான உடல் அமைப்பு, வசனங்கள் மூலமாக ரசிகர்களை மனதார சிரிக்க வைக்கும் கலைஞர்களில் அவரும் ஒருவர்.

படங்களில் வடிவேலுவின் காமெடிக்கு பக்க பலமாக இருப்பது அவருடன் சேர்ந்து நடிக்கும் துணை நடிகர்கள் தான். திரை உலகில் பெரிதும் பிரபலமடையாத துணை நடிகர்களின் நடிப்பிற்கு நாம் கைத்தட்டல் கொடுக்கத்தான் வேண்டும். அந்த அளவிற்கு அவர்களின் நடிப்பும் வடிவேல் உடன் இணைந்து மிக எதார்த்தமாகவும், நகைச்சுவை தூண்டும் விதத்திலும் அமைந்திருக்கும்.

அந்த வகையில் நடிகர் வடிவேலு உடன் இணைந்து 20க்கும் மேற்பட்ட படங்கள் நடித்த நடிகை சுமதி பற்றி நாம் அறியாத பல தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம். நடிகை சுமதி அவர்கள் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு தன் குடும்ப வாழ்க்கை பற்றியும், தற்பொழுது வாழ்ந்து வரும் நிலை பற்றியும் கவலையுடன் சில தகவல்களை பகிர்ந்து உள்ளார்.

நடிகர் வடிவேலுவுடன் இணைந்து புளியோதரை சாப்பிடும் காமெடியிலும், வடிவேலுவை அடிக்கும் காட்சிகளிலும் மிகத் தத்ரூபமாக நடித்து மக்களை சிரிக்க வைத்திருக்கும் நடிகை சுமதியின் வாழ்க்கை கவலைக்கிடமாகவே இருந்து வந்துள்ளது.

நடிகை சுமதி அந்த போட்டியில் கூறியது, தனக்கு 16 வயது இருக்கும் பொழுது திருமணம் ஆகிய நிலையில் அடுத்தடுத்து மூன்று குழந்தைகள் பிறந்துள்ளது. தன் சொந்த மாமாவை தான் சுமதி திருமணம் செய்துள்ளார். ஆனால் தனது கணவர் மிகவும் சந்தேக குணம் கொண்டவர் என்றும் வேலைக்கு செல்லாமல் தன்னை கொடுமை செய்து வந்ததாகவும் கூறியிருந்தார்.

பல கஷ்டங்களுக்கு மத்தியில் தனது முதல் கணவரை விட்டுப் பிரிந்து மூன்று குழந்தைகளுடன் சென்னையில் இரண்டாவது கணவருடன் தான் தற்பொழுது வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். தான் சென்னை வந்த பிறகு தான் தனக்கு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்ததாகவும் அதற்கு தன் இரண்டாவது கணவர் மிகவும் உதவி வந்ததாகவும் தெரிவித்த அவர் தனது இரண்டாவது கணவர் தற்பொழுது தன்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பதாகவும் கூறினார்.

வெளிநாடுகளில் தரமாக களமிறங்கும் விடாமுயற்சி! கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்!

தான் படங்களில் நடிக்க ஆரம்பித்த காலத்தில் ஐம்பதாயிரம் வரை சம்பாதித்து வந்ததாகவும், தற்பொழுது பட வாய்ப்புகள் குறைவதால் நாடகங்களில் நடித்து வருவதாகவும் கூறினார். ஆனால் நாடகங்கள், படங்கள் என இரண்டில் நடித்து வந்தாலும் மாதம் 20 ஆயிரம் ரூபாய் கூட தன்னால் சம்பாதிக்க முடியவில்லை என்றும் இதனால் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் சில நேரங்களில் சிரமப்படுவதாகவும் கண்ணீருடன் தெரிவித்தார்.

பட வாய்ப்புக்காக நடிகர் வடிவேலு அவர்களை சந்திக்க முயற்சி செய்ததாகவும் ஆனால் அவரை நேரில் பார்த்து பட வாய்ப்புகள் கேட்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் கூறினார். மேலும் கொரோனா காலகட்டத்தில் நடிகர் சூரி, நடிகர் யோகி பாபு என பலர் தனக்கு பண உதவி செய்ததாகவும் நன்றியுடன் தெரிவித்தார். இன்றளவும் தான் படத்தில் நடிக்க பல முயற்சி செய்து வருவதாக கூறியுள்ளார். நடிகை சுமதியின் காமெடிகளை தமிழ் ரசிகர்கள் யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...