9ஆம் வகுப்பு படிக்கும்போதே சினிமா வாய்ப்பு.. பிராமண குடும்பத்தில் பிறந்து மத போதகரான நடிகை மோகினி..!!

By Bala Siva

Published:

தமிழ் திரை உலகில் ஒரு தமிழ் பெண் வெற்றி பெறுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. கேரளா, ஆந்திராவை சேர்ந்த ஹீரோயின்கள் பிரபலமாகி வந்த நிலையில் தஞ்சாவூரில் பிராமண குடும்பத்தில் மகாலட்சுமி என்ற பெயருடன் பிறந்து கோவையில் வளர்ந்த நடிகை மோகினி தமிழ் திரை உலகில் ஒரு சில ஆண்டுகள் முன்னணியில் இருந்தார்.

நடிகை மோகினி தஞ்சையில் பிறந்து பள்ளி படிப்பை படித்துக் கொண்டிருந்த நிலையில்தான் அவர் கோவையில் பெற்றோருடன் குடிபெயர்ந்தார். சிறு வயதிலேயே அவருக்கு தூர்தர்ஷனில் விளம்பரபடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த விளம்பர படங்களின் மூலம் அவர் தமிழகம் முழுவதும் பிரபலமானார்.

டைட்டிலில் யார் பெயர் முதலில் போடுவது? மூன்று நடிகைகள் இடையே சண்டை.. சமயோசிதமாக யோசித்த ஏவிஎம்..!

இந்த நிலையில் தான் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கேயார் என்பவர் ‘ஈரமான ரோஜாவே  என்ற படத்தை உருவாக்க முயன்றபோது, தூர்தர்ஷன் விளம்பர படத்தில் மோகினியை பார்த்து அவரை நாயகியாக நடிக்க வைக்க தொடர்பு கொண்டார். அப்போது மோகினிக்கு வெறும் 14 வயதுதான். அவர் அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்.

mohini1

மோகினியின் பெற்றோர்கள் அவரை நடிகையாக்க கொஞ்சம் தயக்கம் காட்டினார். இந்த வயதிலேயே சினிமாவுக்கு சென்று விட்டால் படிப்பு கெட்டுவிடும் என்று யோசித்தனர். இருப்பினும் மோகினி விருப்பப்படி சினிமாவில் நடிக்க அனுமதித்தனர். ஒரே ஒரு படத்தில் நடித்து அதன்பின் மீண்டும் படிப்பை தொடரலாம் என்பதுதான் மோகினியின் எண்ணமாக இருந்தது.

முதல் படமான ஈரமான ரோஜாவே என்ற திரைப்படம் கடந்த 1991ஆம் ஆண்டு வெளியானது. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அப்போது சூப்பர் ஹிட்டானது. இந்த படத்தில் சிவா என்பவர் நாயகனாக நடித்திருந்தார்.

இந்த படத்தின் வெற்றி காரணமாக மோகினிக்கு அடுத்த படமே தெலுங்கில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதுவும் என்டிஆர் பாலகிருஷ்ணா நாயகனாக நடித்த படத்தில் அவர் நாயகியாக நடித்தார். அந்த படமும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பது. இதனையடுத்து டான்சர் என்ற ஹிந்தி படத்தில் அவர் நடித்தார். அவர் நடித்த ஒரே ஹிந்தி படம் இதுதான்.

mohini2

அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்ததால் அவரால் படிப்பை தொடர முடியவில்லை. ஆனாலும் வருமானம் அதிகம் வந்ததன் காரணமாக சினிமாவில் மேலும் கவனம் செலுத்த தொடங்கினார்.

தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் அவர் கவனம் செலுத்தினார். தமிழில் அவர் பிரசாந்த் நடித்த  உனக்காக பிறந்தேன், பார்த்திபன் நடித்த உன்னை வாழ்த்தி பாடுகிறேன், சிவாஜி கணேசன் நடித்த சின்ன மருமகள் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

ஒரே ஒரு தமிழ் படத்தில் நடித்த நடிகை.. உச்சத்தில் புகழ்.. இன்று என்னவாக இருக்கிறார் தெரியுமா?

மலையாள நடிகைகள் தமிழ் திரை உலகில் புகழ்பெற்ற நிலையில், தமிழ் பெண்ணான நடிகை மோகினி மலையாள படங்களில் பிரபலமானார். அவர் நடித்த மலையாள படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்டானது.

1991ஆம் ஆண்டு தனது நண்பர் பரத் கிருஷ்ணசாமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு அமெரிக்கா சென்று குடியேறினார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

திருமணத்திற்கு பின்னர் அவ்வப்போது சென்னை திரும்பிய மோகினிக்கு சில பட வாய்ப்புகள் வந்தது. அதன்பின்னர் ஒரு சில தமிழ் படங்களிலும், சில மலையாள படங்களிலும் நடித்தார். ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் உருவான குற்றப்பத்திரிகை என்ற படத்தில் அவர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த நிலையில் இந்த படம் கடைசி வரை வெளியாகவில்லை.

mohini3

திரை உலகில் மட்டுமின்றி சின்னத்திரை உலகிலும் மோகினி கவனம் செலுத்தினார். கே.பாலச்சந்தர் தயாரித்து, இயக்கிய காதல் பகடை என்ற தொலைக்காட்சி தொடர் அவருக்கு மிகப்பெரிய அளவில் புகழ்பெற்று கொடுத்தது. அதன் பிறகு ஒரு பெண்ணின் கதை, காமெடி உற்சவம், ராஜராஜேஸ்வரி உள்ளிட்ட ஒரு சில சீரியல்களில் நடித்துள்ளார்.

கடந்த 2006ஆம் ஆண்டு அவர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார். அதன் பிறகு சில தொலைக்காட்சி தொடர்களிலும், சில திரைப்படங்களிலும் நடித்த மோகினி தற்போது நடிப்பை முழுமையாக நிறுத்திவிட்டு மத போதகராகி உள்ளார் என்றும் அமெரிக்காவில் உள்ள பல சர்ச்களில் அவர் மத போதக பணியை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. அவ்வப்போது அவர் சென்னைக்கும் வருவதாகவும் இங்கும் அவர் சில சர்ச்சுகளுக்கு சென்று அவர் மத போதக உரை நிகழ்த்துவதாகவும் கூறப்படுவது உண்டு.

தமிழ் திரை உலகில் பாடகிகளாக மாறிய நடிகைகள் யார் யார் தெரியுமா?

பூனை கண்களால் தனது அழகால் 90களின் இளைஞர்களின் மனதில் கனவு கன்னியாக இருந்த மோகினி பிராமண குடும்பத்தில் பிறந்து, கிறிஸ்தவ போதகராக மாறி சேவை செய்து கொண்டிருக்கிறார். அவரது படங்கள் இன்றும் கவனத்தை பெறும்.