பொதுவாக நடிகைகள் மார்க்கெட் குறைந்தவுடன் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாகி விடுவார்கள். அசின் உள்பட பல நடிகைகள் தொழிலதிபர்களை திருமணம் செய்து கொண்டு இன்று நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கோடிக்கு சொந்தக்காரர்களாக உள்ளனர்.
அப்படி தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலான நடிகைகளில் ஒருவர் தான் ரீமாசென். இவர் தமிழில் கௌதம் மேனன் இயக்கிய முதல் படமான மின்னலே திரைப்படத்தில் அறிமுகமானார். மாதவன் மற்றும் அப்பாஸ் ஆகிய இருவரும் நாயகன்களாக நடித்த இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இவருக்கு முதல் படத்திலேயே பாராட்டுக்கள் குவிந்தது .
நடிகையர் திலகம் சாவித்திரி… 19 மாதங்கள் கோமாவில்… உதவ ஆளின்றி தவித்த இறுதிக்காலம்…!!
இதனை அடுத்து ரீமாசென் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் தான் தளபதி விஜய்யுடன் பகவதி மற்றும் விக்ரமுடன் தூள் ஆகிய இரண்டு தமிழ் படங்களில் நடித்தார். இந்த இரண்டு படங்களுமே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
மாதவன் நடித்த ஜே ஜே, ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் உருவான எனக்கு 20 உனக்கு 18 ஆகிய படங்களில் நடித்தார். விஷால் நடித்த முதல் திரைப்படமான செல்லமே படத்தின் நாயகி இவர் தான். இந்த படத்தில் அவருடைய நடிப்பு அட்டகாசமாக இருக்கும் .
இதனை அடுத்து அர்ஜுன் நடித்த கிரி மற்றும் விஷால் நடித்த திமிரு ஆகிய படங்களில் நடித்தார். சிம்புவுடன் இவர் நடித்த ஒரே படமான வல்லவன் படமும் நல்ல வரவேற்பு பெற்றது. விக்ரமுடன் ரீமாசென் நடித்த ராஜபாட்டை திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியை நிலையில் அந்த படம் படுதோல்வி அடைந்தது.
நயன்தாரா படத்தில் ஹீரோயினாகும் திரிஷா!
நடிகை ரீமாசென் நடித்த கடைசி திரைப்படம் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் உருவான சட்டம் ஒரு இருட்டறை படம் தான். இந்த படத்தை முடித்தவுடன் அவர் தொழிலதிபர் ஷிவ்கரன் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அடுத்த ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. .
திருமணம் மற்றும் குழந்தை பிறப்புக்கு பிறகு ரீமா சென்னுக்கு ஒரு சில வாய்ப்புகள் வந்த போதும் அவர் நடிக்க முடியாது என்று கூறிவிட்டார். ரீமாவின் கணவர் ஒரு மிகப்பெரிய ஹோட்டல் அதிபர். அந்த ஹோட்டல் நிர்வாகங்களையும் ரீமாவே கவனித்துக் கொண்டு வருவதாக கூறப்பட்டது.
இன்று நூற்றுக்கணக்கான கோடிக்கு அவர் சொந்தக்காரர் என்று கூறப்படுகிறது. நடிகை ரீமா சென் இப்போது நடிக்க வந்தால் கூட அவரை ரசிகர்கள் கூட்டம் வரவேற்கும். ஆனால் அவர் இனி நடிப்பதாக ஐடியா இல்லை என்று உறுதியாக கூறிவிட்டார்.