நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் திரைப்பட இயக்குனராக அறிமுகமாவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த தகவல் வெளியானதில் இருந்து விஜயையும் அவருடைய மகனையும் ஒப்பிட்டு பேசி சமூக வலைத்தளங்களில் பலர் அவரது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதையெல்லாம் பார்த்த விஜய் வாரிசு நடிகர் என்ற பேச்சால் தான் பட்ட கஷ்டம் தன்னோடு போகட்டும் தன் மகனுக்கும் அதே நிலை வரக்கூடாது என லைக்கா நிறுவனத்திடம் கடுமையான சில கண்டிசன்களை விதித்துள்ளார்.
லைக்கா நிறுவனம் தன்னுடைய முதல் திரைப்படத்தை தமிழில் எடுக்க வந்தபோது அவர்களுக்கு ஆதரவளித்தவர் நடிகர் விஜய். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான கத்தி திரைப்படம் எதிர்கொண்ட பிரச்சனைகள் விஜய்யை பெருமளவில் பாதித்தாலும் தொடர்ந்து ஆதரவளித்து படத்தை ரிலீஸ் செய்ய தோள் கொடுத்தவர் விஜய். அதற்கு ஏதாவது கைமாறு செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தது லைக்கா நிறுவனம்.
இந்த நிலையில் தான் விஜய்யின் மகன் திரைப்பட இயக்குனர் பயிற்சி பெற்று வருவதாக தகவல் அறிந்த லைக்கா, சஞ்சய் படம் பண்ணுவது குறித்து விஜய்யிடம் பேசி உள்ளனர். ஆனால் அந்தப் பேச்சுக்கு விஜய் எதுவும் பெரிய அளவில் முகம் கொடுக்காததால், ஜேசன் சஞ்சய் உடன் பணிபுரிந்த ஒருவர் மூலமாக நேரடியாக சஞ்சையை தொடர்பு கொண்டுள்ளனர். மேலும் லைக்கா நிறுவனம் மற்ற இயக்குனர்களை போலவே சஞ்சையிடமும் கதை கேட்டு தான் படத்தை ஓகே கூறி இருக்கிறது.
அப்பாவின் நிழலில் தான் இளைப்பாறினார் என்று அடையாளத்தை தன் தோளிலிருந்து இறக்கவே விஜய்க்கு பல வருடங்களானது. அதை அடையாளம் தன் மகனுக்கும் வந்துவிடக்கூடாது என்பதற்காகத் தான் சஞ்சய் சினிமாவில் ஆர்வம் காட்டியதும் சினிமாவில் வருவதற்கான அத்தனை தகுதியோடும் வந்தால் தான் ஊர் பேச்சுக்கு இடம் இருக்காது என வெளிநாடு அனுப்பி தன் மகனை படிக்க வைத்தாராம் விஜய்.
இப்படிப்பட்ட நிலையில் நேரடியாக குட்டி டைரக்டர் ஜேசன் சஞ்சயை லைக்கா நிறுவனம் புக் செய்ததால் இனி நம் கையில் எதுவும் இல்லை எல்லாமே கை மீறிவிட்டது என தனது தரப்பில் இருந்து சில நிபந்தனைகளை மட்டும் லைகாவிடம் கூறியுள்ளார் நடிகர் விஜய்.
அண்ணா நீ தெய்வம் படம் எப்படி அவசர போலீஸ் 100 ஆனது?
எந்த விதத்திலும் சஞ்சய்யின் திரை வாழ்க்கையில் தன்னுடைய தலையீடு இருக்காது என்றும் விஜய்யின் மகன் என்பதால் தான் இந்த வாய்ப்பு என்ற வார்த்தையே வரக்கூடாது எனவும் கூறி உள்ள விஜய், மகனுக்கு கிடைக்க கூடிய பாராட்டுகளோ, விமர்சனமோ எதுவாக இருந்தாலும் அவரே சம்பாதித்ததாக இருக்க வேண்டும் என லைக்கா நிறுவனத்திடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அதன்படி சஞ்சைக்கும் திரைப்பட இயக்குனராக அறிமுகம் ஆகும் தகுதி உள்ளது என்பதை உணர்த்துவதற்காக தான் விஜயின் மகனாக இருந்தாலும் விஜய்க்கு போட்டியாளரான அஜித்தின் மேனேஜர் சந்திரா வை சஞ்சய் இயக்கவிருக்கும் படத்திற்கு பிஆர்ஓவாக நியமித்திருக்கிறார்கள் எனவும் சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.