மக்கள் திலகம் எம்ஜிஆர் முதல்வராக பதவியேற்கும் முன் சில படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர் திடீரென முதல்வராகிவிட்டதால் கடைசி நேரத்தில் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தை மட்டும் அவர் அவசர அவசரமாக முடித்தார். ஆனால் வேறு சில படங்கள் ஒரு சில காட்சிகள் மட்டும் எடுக்கப்பட்டு நின்று போன நிலையில், அந்த நின்று போன படங்களில் ஒன்றின் காட்சிகளை மட்டும் வைத்து தொழிலதிபர் ஜேப்பியார் ஒரு திரைப்படமாக எடுத்தார். அதுதான் நல்லதை நாடு கேட்கும்.
எம்.ஜி.ஆரின் மிகப்பெரிய தொண்டராக ஜேப்பியார் இருந்தார். கல்வித்தந்தை என்ற பெயரை பெற்ற அவர் பல பல்கலைக்கழகம், பாலிடெக்னிக், மற்றும் பள்ளிகளை வைத்துள்ளார். இருந்தாலும் அவர் திரைத்துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று முடிவு செய்து எம்ஜிஆர் நடித்த ஒரு சில காட்சிகளை மட்டுமே வைத்து நல்லதை நாடு கேட்கும் என்ற படத்தை எடுத்தார்.
எம்ஜிஆர், பத்மபிரியா மற்றும் எஸ்வி சுப்பையா ஆகிய மூன்று பேர் நடித்த சில காட்சிகள் மட்டும் கிடைத்ததை அடுத்து அந்த காட்சிகளின் உரிமையை வாங்கிய ஜேப்பியார் ஒரு கதை தயார் செய்து அவரே தயாரித்து இயக்கினார்.
கணேசனுக்கு பெரியார் கொடுத்த சிவாஜி பட்டம்….. எம்ஜிஆர் தான் காரணம்….. எப்படி தெரியுமா….?
ஜேப்பியார் ஜோடியாக ரேகா, முக்கிய கேரக்டரில் கௌதமி மற்றும் கவுண்டமணி செந்தில் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படம் எம்ஜிஆர் நடித்த காட்சிகளை உள்ளடக்கியது என்பதால் பலர் விரும்பி பார்த்தனர்.
காவல்துறை அதிகாரியான எஸ்பி சுப்பையாவின் மகள் தான் பத்மபிரியா. எம்ஜிஆர் மற்றும் பத்மபிரியா காதலிப்பார்கள். ஆனால் எஸ்வி சுப்பையா இந்த காதலை விரும்ப மாட்டார். இந்த நிலையில் திடீரென எம்ஜிஆர் மாயமாகிவிட அவர் எங்கே சென்றார் என்று மர்மமாக இருக்கும்.
அவரின் வரவுக்காக பத்மபிரியா காத்திருக்க ,எம்ஜிஆர் தம்பி ஜேப்பியார் கண்டிப்பாக அண்ணன் வருவார் என்று பத்மபிரியாவுக்கு நம்பிக்கை கொடுப்பார். எம்.ஜி.ஆர் மீண்டும் வந்து பத்மப்ரியாவை கைபிடித்தாரா? எம்ஜிஆர் பத்மபிரியா காதலுக்கு எஸ்பி சுப்பையா சம்மதம் தெரிவித்தாரா? என்பது தான் இந்த படத்தின் முடிவு.
இந்த படத்தின் ஒரு சில எம்ஜிஆர், பத்மபிரியா காட்சிகளை மட்டும் ஆங்காங்கே இணைத்து ஒரு முழு எம்ஜிஆர் படம் போல் ஜேப்பியார் மாற்றி இருப்பார். இந்த படத்தில் சங்கர் கணேஷ் இசையில் உருவான ஏழு பாடல்கள் இருந்தது வாலி தான் அனைத்து பாடல்களையும் எழுதி இருந்தார்.
கடைசி நேரத்திலும் கமலின் மகளுக்காக எம்ஜிஆர் கொடுத்த அன்பு பரிசு என்ன தெரியுமா?
எம்ஜிஆர் 1987 ஆம் ஆண்டு மறைந்த நிலையில் நான்கு ஆண்டுகள் கழித்து 1991 ஆம் ஆண்டு இந்த படம் வெளியானது. இந்த படம் எம்ஜிஆர் ரசிகர்களை தவிர மற்ற நடுநிலை ரசிகர்களை கவரவில்லை. இந்த படத்தின் திரைக்கதை மிகவும் சுமாராக இருந்ததாக கூறப்பட்டது.
பட்ஜெட்டை விட 800 மடங்கு லாபம்.. எம்ஜிஆர் இயக்கிய முதல் திரைப்படம்..! என்ன படம் தெரியுமா?
எம்.ஜி.ஆர் நடித்த அவசர போலீஸ் 100 என்ற படத்தின் சில காட்சிகளை வைத்து அதே பெயரில் பாக்யராஜ் எடுத்த அவசர போலீஸ் 100 திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஆனால் நல்லதை நாடு கேட்கும் என்ற படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இருப்பினும் எம்ஜிஆர் நடித்து வெளியான கடைசி திரைப்படம் என்ற பெருமையைப் பெற்ற படம் இதுதான்.