“ஏழை ஜாதி” தெறிக்கவிடும் வசனங்கள்… விஜயகாந்த் அரசியலுக்கு இது தான் ஆரம்பம்…!!

விஜயகாந்த் தனது திரையுலக வாழ்க்கையில் எத்தனையோ அதிரடி ஆக்சன் படங்களில் நடித்துள்ளார். காவல்துறை அதிகாரியாகவும், தேசப்பற்று மிக்க கேரக்டர்களிலும்  நடித்துள்ளார். ஆனால் அவர் நடித்த அதிரடி அரசியல் வசனம் கொண்ட திரைப்படம் தான் ஏழை…

விஜயகாந்த்

விஜயகாந்த் தனது திரையுலக வாழ்க்கையில் எத்தனையோ அதிரடி ஆக்சன் படங்களில் நடித்துள்ளார். காவல்துறை அதிகாரியாகவும், தேசப்பற்று மிக்க கேரக்டர்களிலும்  நடித்துள்ளார். ஆனால் அவர் நடித்த அதிரடி அரசியல் வசனம் கொண்ட திரைப்படம் தான் ஏழை ஜாதி. இந்த படம் விஜயகாந்த்க்கு திரையுலகில் மீண்டும் ஒரு வெற்றியை கொடுத்து அவரை ஊக்கப்படுத்தியது.

லியாகத் அலிகான் தான் இந்த படத்தின் வசனகர்த்தா மற்றும் இயக்குனர். இந்த படத்தின் ஒவ்வொரு வசனமும் அனல் பறக்கும். குறிப்பாக அரசியல் வசனம் 90களில் காலகட்டத்தில் இருந்த அரசியல்வாதிகளை நையாண்டி செய்யும் வகையில் இருந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படம் வெளியான காலகட்டத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்தார். ஜெயலலிதா பால்கனியிலிருந்து கை காட்டும் காட்சிகளை கூட இந்த படத்தில் வைத்திருப்பார்கள்.

விஜயகாந்த் படத்தின் ரீமேக்கில் நடித்த ரஜினிகாந்த்.. இரண்டு படங்களின் ரிசல்ட் என்ன தெரியுமா?

ezhai jaathi1 1

அன்றைய காலகட்டத்தில் இருந்த ஆளும், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் நயவஞ்சகமாக அப்பாவி மக்களை சுரண்டியது எப்படி என்பது போன்ற காட்சிகள் இந்த படத்தில் தைரியமாக வைக்கப்பட்டிருந்தது. இந்த படத்தின் நாயகியாக நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜெயப்பிரதா தமிழில் நடித்தார். நம்பியார், மனோரமா, மன்சூர் அலிகான் செந்தில் உள்பட பலரது நடிப்பில் உருவான இந்த படத்திற்கு இசை ஞானி இளையராஜா இசையமைத்திருந்தார்.

எம்.ஜி.ஆர் நடித்த பல்லாண்டு வாழ்க திரைப்படத்திற்க்கு பின்னால் இப்படி ஒரு பூகம்பம் இருக்கிறதா..

இந்த படத்தில் இடம்பெற்ற ஆறு பாடல்களில் ஏழை ஜாதி கோழை ஜாதி அல்ல, அதோ அந்த நதியோரம் ஆகிய இரண்டு பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகியது. இந்த படம் கடந்த 1993 ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி வெளியானது. இந்த படத்தின் வசனங்களுக்காகவே மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. இயக்குனர் லியாகத் அலிகான் பக்கம் பக்கமாக வசனம் எழுதி இருக்க அதை அசராமல் விஜயகாந்த் பேசி நடித்திருப்பார்.

ஒரு பெரிய தொழிலதிபரின் மகனாக இருந்தாலும் ஏழை மக்களுக்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்யும் கேரக்டரில் விஜயகாந்த் நடித்திருப்பார். ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கும்போதே ஒரு தொழிலதிபர் நினைத்தால் அந்த ஆட்சியை கலைக்க முடியும் அல்லது வேறு ஆட்சி அமைக்க முடியும் போன்ற காட்சிகளும் இதில் உண்டு.

ezhai jaathi2 1

இந்த படத்தின் சிறப்புகளில் ஒன்று ஸ்டண்ட் காட்சிகள். எல்லா படத்தையும் போல் இதிலும் விஜயகாந்த் பறந்து பறந்து வில்லன்களை அடித்து நொறுக்கும் அதிரடி ஆக்சன் காட்சிகள் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக இருந்தது. இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றதோடு இந்த படத்தின் தைரியமான வசனங்களை ஊடகங்கள் பாராட்டின.

எம்.ஜி.ஆரும் கவுண்டமணியும் இணைந்து படத்தில் நடித்துள்ளார்களா? அதுவும் எத்தனை படங்கள் தெரியுமா..

பின்னாளில் விஜயகாந்த் கட்சி ஆரம்பிப்பதற்கு ஒரு ஊன்றுகோல் ஆகவும் இந்த படம் இருந்தது என்று கூறினால் அது மிகையாகாது. படம் வெளியாகி  சில ஆண்டுகள் கழித்து விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். அதனால் விஜயகாந்த் அரசியல் வருவதற்கு ஒரு ஆரம்ப புள்ளியாக இந்த படம் இருந்தது என்றால் அது ஏழைஜாதி தான்.