எம்.ஜி.ஆரும் கவுண்டமணியும் இணைந்து படத்தில் நடித்துள்ளார்களா? அதுவும் எத்தனை படங்கள் தெரியுமா..

பொதுவாக தமிழ் சினிமாவில் எந்த மாதிரி படங்களாக இருந்தாலும், அனைத்து ரசிகர்களும் விரும்பி பார்ப்பது நகைச்சுவையை மட்டும் தான். அந்த கால சினிமாவில் இருந்து இந்த கால சினிமா வரை படத்தின் நகைச்சுவை காட்சியை ரசிப்பதற்காகவே தனி கூட்டம் உள்ளது. பொழுதுபோக்காக இருந்தாலும் மனிதனின் கவலைகளை மறக்க வைக்கும் விதமாக அமைவது நகைச்சுவை மட்டும் தான்.

இந்த நகைச்சுவையை தமிழ் சினிமாவில் அள்ளி கொடுத்து வந்தவர் தான் நக்கல் மன்னன் கவுண்டமணி. இவருடைய காமெடிகளைப் பார்த்து நாம் இன்று வரை கவலைகளை மறந்து சிரித்து வருகிறோம். மேலும் இந்த காலத்து படங்களுக்கும் இவருடைய காமெடி தான் மூலதனமாக இருந்து வருகிறது. பல சின்னத்திரை தொலைக்காட்சிகள் இவருடைய காமெடிகளை போட்டு தான் இருவரை முன்னிலையில் இருந்து வருகிறது.

நக்கல் மன்னன் கவுண்டமணியின் உண்மையான பெயர் சுப்பிரமணி. ஆனால் இவர் சினிமாவில் நடிக்கும் நடிகர்களை கவுண்டர் கொடுத்து நக்கல் செய்து வருவதில் மன்னன் என்பதால் இவருக்கு கவுண்டமணி என்னும் பெயர் வந்துள்ளது. இவர் தொடர்ந்து 300 படங்களுக்கு மேலாக நடித்துள்ளார்.

அதிலும் கவுண்டமணியும், நடிகர் செந்திலும் சேர்ந்து நடிக்கும் காமெடிக் காட்சிகள் செம லூட்டியாக தான் இருக்கும். இவருடைய காமெடிகளை பார்க்கும் போது வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்ற பழமொழிக்கு ஏற்ப மருந்தாக அமைந்திருக்கும்.

இந்நிலையில், கவுண்டமணிக்கு வயதான காரணத்தினால் கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்க முடியாமல் ஓய்வில் இருந்து வருகிறார். ஆனாலும், சமீப காலமாக ஒரு சில படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து, முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த படத்தில் சிவகார்த்திகேயனின் பெரியப்பாவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

கவுண்டமணி தமிழ் சினிமாவிற்கு நாகேஷ் ஹீரோவாக நடித்த சர்வர் சுந்திரம் படத்தின் மூலமாக அறிமுகமானார். அந்த படத்தில் கார் ஓட்டுநராக ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதை தொடர்ந்து பாரதி ராஜா இயக்கத்தில் கமல், ரஜினி நடித்த 16 வயதினிலே படத்தில் ஒரு வில்லத்தனம் கலந்த நகைச்சுவை நடிகராக நடித்திருப்பார்.

சாவித்திரிக்கு – சரோஜாதேவிக்கும் இடையே இப்படி ஒரு போட்டியா… என்ன நடந்தது தெரியுமா?

அதை தொடர்ந்து, பல படங்களில் காமெடியனாகவும், குணசித்திர வேடத்திலும் நடித்து கலக்கியிருப்பார். தமிழ் சினிமாவில் காமெடியன்களில் நாகேஷிற்கு அடுத்த படியாக அதிக சம்பளம் வாங்கியவர் கவுண்டமணி தான்.

இது எல்லாம் ஒரு புறம் இருக்க கவுண்டமணி குறித்து மிகவும் சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. அது என்ன தெரியுமா காமெடி நடிகர் கவுண்டமணியும் நடிகர் எம்.ஜி.ஆர் உடன் இணைந்து ஒரு படத்தில் நடித்துள்ளார் என்பது தான். எம்.ஜி.ஆரின் ‘உழைக்கும் கரங்கள்’ படத்தில் அவர் கூட்டத்தில் ஒருவராக நின்றிருப்பார். எம்.ஜி.ஆரின் ‘நல்லதை நாடு கேட்கும்’ படத்தில் கவுண்டமணியும் நடித்திருப்பார். இந்த படம் நடித்தது குறித்து அதிகமாக பேசப்பட வில்லை என்றாலும் கவுண்டமணி, எம்.ஜி.ஆருடன் நடித்துள்ளார் என்பதே தனி சிறப்பு தான்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews