சென்னையை சேர்ந்த ராகவா லாரன்ஸ் சிறுவயதிலேயே மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பெரும் பொருளாதார நெருக்கடியிலும் அவரது தாய் லாரன்ஸுக்கு சிகிச்சை பார்த்து வந்த நிலையில் ராகவேந்திரா சாமியை பற்றி அறிந்து கொண்டு அங்கு சென்று லாரன்ஸ் அவர்கள் மனமுருகி வேண்டியுள்ளார். அதன் பிறகு அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக லாரன்ஸ் மூளை புற்றுநோயிலிருந்து குணமடைந்தார். இதையடுத்து தன் நோயை குணப்படுத்திய ராகவேந்திராவை தனது குருவாக ஏற்றுக் கொண்ட லாரன்ஸ் பின்னாளில் ராகவேந்திரா சாமிக்கு சென்னையில் கோவில் ஒன்றும் கட்டினார்.
ராகவா லாரன்ஸ் சிறுவயதிலேயே அபாரமாக டான்ஸ் ஆடும் திறமை கொண்டவர். அவர் ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சூப்பராயன் அவர்களிடம் எடுபிடி உதவியாளராக இருந்தார். அவருக்கு வெற்றிலை மடித்து தருவதுதான் லாரன்ஸின் முக்கியமான வேலை. அந்த சமயத்தில் தான் ரஜினிகாந்த் லாரன்ஸை தற்செயலாக பார்த்துவிட்டு யார் இந்த பையன் என விசாரித்துள்ளார்.
அப்போது சூப்பர் சுப்பராயன் லாரன்ஸ் நன்றாக டான்ஸ் ஆடுவார் என்று கூற ரஜினி தன்முன் ஆடி காட்டுமாறு கேட்டுள்ளார். லாரன்ஸும் உடனடியாக நடனமாடி காட்ட வியந்து போன ரஜினிகாந்த் நன்றாக நடனம் ஆடுகிறாய் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு லாரன்ஸ் தனக்கு டான்ஸ் யூனியனில் ஒரு உறுப்பினர் அட்டை மட்டும் வாங்கிக் தருமாறு கேட்டுள்ளார்.
அப்போது டான்ஸ் யூனியனில் உறுப்பினர் அட்டை வாங்குவது என்பது அவ்வளவு சுலபமல்ல. ஆனால் யூனியன் தலைவரிடம் ரஜினிகாந்த் ஒரு போன் செய்தவுடன் ராகவா லாரன்ஸ்-க்கு உறுப்பினர் அட்டை கிடைத்தது. உறுப்பினர் அட்டைக்கான பணத்தையும் ரஜினியே வழங்கினார்.
அவர் முதன்முதலாக டான்ஸராக ஆடியது சம்சார சங்கீதம் திரைப்படத்தில் வந்த ஒரு பாடலில்தான். அதன் பிறகு பல படங்களில் பின்னணி நடன குழுவுடன் இணைந்து லாரன்ஸ் ஆடியுள்ளார். பின்னர் தனது திறமையால் கொஞ்சம் கொஞ்சமாக முன்னறினார். ஒரு கட்டத்தில் அசிஸ்டன்ட் டான்ஸ் மாஸ்டர் ஆக வந்தார். அப்போதுதான் அவருக்கு சிரஞ்சீவி அறிமுகம் கிடைத்தது. அவரது திறமையை பார்த்து ஆச்சரியமடைந்த சிரஞ்சீவி அவரை தன்னுடைய படத்திற்கு நடன இயக்குனராக நியமித்தார்.
டைட்டிலில் யார் பெயர் முதலில் போடுவது? மூன்று நடிகைகள் இடையே சண்டை.. சமயோசிதமாக யோசித்த ஏவிஎம்..!
சிரஞ்சீவியின் பல தெலுங்கு படங்களுக்கு ராகவா லாரன்ஸ் தான் நடன இயக்குனராக பணிபுரிந்தார். அவருடைய படத்தில் நடனங்கள் எல்லாம் மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்நது தமிழிலும் அவர் பல படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்தார்.
ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி என்ற திரைப்படத்தில் உழைப்பாளி இல்லாத நாடுதான் என்ற பாடலுக்கு நடனம் அமைத்தது மட்டுமின்றி ரஜினியுடன் ஆடினார். ஜென்டில்மேன் போன்ற பல படங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்தார்.
அஜித் ஷாலினி நடிப்பில் வெளியான அமர்க்களம் திரைப்படத்தில் தியேட்டரில் வைத்து எடுக்கப்பட்ட நடனமும் பார்த்தேன் ரசித்தேன் திரைப்படத்தில் பேருந்தில் வைத்து எடுக்கப்பட்ட நடனமும் லாரன்ஸ் அவர்களின் திறமையை தனித்துவமாக காட்டியது. இதன் பிறகு அவரது நடனத்திற்கு என்று தனி ரசிகர் கூட்டம் உருவாகியது.
அதன் பிறகு லாரன்ஸ் சினிமாவில் நடிக்கவும் தொடங்கினார். அவர் நடித்த முதல் படம் உன்னை கொடு என்னை தருவேன். அஜித் நடித்த இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார். லாரன்ஸ் கதாநாயகனாக நடித்த படம் அற்புதம். இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து சில படங்களில் லாரன்ஸ் கதாநாயகனாக நடித்த நிலையில் நாகார்ஜூன் மற்றும் அனுஷ்காவை வைத்து டான் என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக மாறினார்.
நடன மாஸ்டராக அறிமுகமாகி நடிகராக நடித்து இயக்குனராக மாறியுள்ள லாரன்ஸ் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அதேபோன்று அவருக்கென்று தனி ரசிகர்களும் உள்ளனர். அவரது இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளியான காஞ்சனா திரைப்படம் 100 கோடி வசூல் சாதனை புரிந்த நிலையில் திரைப்படத்தின் அடுத்தடுத்த பாகங்களும் வெளியானது.
பொதுவாக ரஜினிகாந்த் தன்னுடைய மாஸ் படங்களை இரண்டாவது பாகம் எடுக்க அனுமதிக்க மாட்டார். ஆனால் ராகவா லாரன்ஸ் கேட்டுக் கொண்டதற்காக சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க ஒப்புக்கொண்டார். அந்த படம் தான் தற்போது சந்திரமுகி 2 என்ற பெயரில் தயாராகி செப்டம்பர் 15-ல் திரையரங்கில் ரிலீஸ் ஆக உள்ளது .
காமெடி நடிகர் ரமேஷ் கண்ணா திரைப்படம் இயக்கியுள்ளாரா? அதுவும் அஜித் படமா?
ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சூப்பராயனிடம் உதவியாளராக பணிபுரிய துவங்கி இன்று திரையுலகில் தவிர்க்க முடியாத பிரபல நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.