சாவித்திரிக்கு – சரோஜாதேவிக்கும் இடையே இப்படி ஒரு போட்டியா… என்ன நடந்தது தெரியுமா?

Published:

தமிழ் சினிமாவில் அந்த காலத்து நடிகைகள் போல வராது என பலர் கூறி நாம் பார்த்திருப்போம். அந்த அளவிற்கு ஹீரோக்களுக்கு இணையாக நடித்த மிகவும் பிரபலமான இரண்டு நடிகைகள் தான் ஒன்று சாவித்திரி மற்றொன்று நடிகை சரோஜாதேவி.

1960களில் தமிழ் சினிமாவை பத்மினி, சாவித்திரி, சரோஜாதேவி ஆகிய மூன்று முன்னணி கதாநாயகிகள் தான் ஆட்சி செய்து வந்துள்ளனர். அதிலும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்று கூறும் அளவிற்கு அவர்களுடைய நடிப்பு, நாட்டியம், வசன உச்சரிப்பு எல்லாமே தனித்துவமாக இருக்கும்.

படத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு, அதற்கு ஏற்ப முகபாவணையை கொண்டு வந்து நேர்த்தியாக நடித்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்க்கும் அளவிற்கு நடித்திருப்பார்கள். இந்த நிலையில் ஒரு படத்தில் ஒரு நடிகை நடிப்பதாக இருந்தால் அடுத்த முன்னணி இயக்குனர்கள், ஹீரோக்களின் படங்களில் அடுத்த இரண்டு நடிகைகளும் நடிக்க ஒப்பந்தமாகி விடுவார்கள்.

அதற்கு பிறகு தான் மற்ற நடிகைகளுக்கு, துணை நடிகைகளுக்கு இந்த வாய்ப்புகள் வழங்கப்படும். இந்த நிலையில் தான் சாவித்திரி மற்றும் சரோஜாதேவி இருவரும் பார்த்தால் பசி தீரும் என்னும் படத்தில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். ஏ. பீம்சிங் இயக்கத்தில் 1962 ஆம் ஆண்டு இந்த படம் வெளியானது. அதில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் கதாநாயகனாக நடித்துள்ளனர். இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக கமல்ஹாசன் நடித்துள்ளார்.

பொதுவாக இரண்டு நடிகைகள் சேர்ந்து நடித்தார்கள் என்றால் படப்பிடிப்பு தளத்தில் மிகவும் மகிழ்ச்சியாக கலகலவென பேசிக்கொண்டே இருப்பதை பார்த்திருப்போம். ஆனால் இந்த இரு நடிகைகளுக்கு மட்டும் சற்று மாறுதலாக நடிந்து உள்ளது.

சாவித்திரி மற்றும் சரோஜாதேவி இருவரும் படப்பிடிப்பு தளங்களில் தங்களுடைய காட்சிகள் படமாக்கப்படும் பொழுது மட்டும் இணைந்து நடித்து விட்டு அதன் பின் தனியாக அமர்ந்து விடுவார்களாம். ஒருவருக்கு ஒருவர் பார்த்து கொள்வது, பேசிக்கொள்வது என எந்த தொடர்பும் இருக்காது.

அது மட்டும் இல்லாமல் பார்த்தால் பசி தீரும் படத்தின் ஒரு நிகழ்ச்சியில் தன் கூட நடித்திருந்த நடிகர்கள் பற்றி சரோஜாதேவி ரொம்பவே பெருமையாக பேசி ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அப்போது அந்த பட்டியலில் நடிகை சாவித்திரி பற்றி எந்த கருத்தும் அவர் தெரிவிக்க வில்லை.

அதை தொடர்ந்து நடிகை சரோஜாதேவி, எம். ஜி. ஆர் நடித்த தான் பெற்றால் தான் பிள்ளையா என்ற படத்தின் 100வது நாள் வெற்றிகரமாக கொண்டாடப்பட்டது. அந்த விழாவுக்கு அறிஞர் அண்ணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருதுகள் வழங்கி வந்துள்ளார்.

1966 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் கொண்டாட்டத்தின் போது தான் சரோஜாதேவிக்கு புதிதாக திருமணம் நடந்திருந்ததால் அந்த நேரத்தில் விழாவில் கலந்து கொள்ள முடிய வில்லை.

இந்த சூழ்நிலையில் தான் படத்தின் கதாசிரியர் நடிகை சாவித்திரி அவர்களை நேரில் சந்தித்து நிலைமையை எடுத்து கூறியுள்ளார். மேலும் அறிஞர் அண்ணா சிறந்த விருந்தினராக வந்து பரிசுகளை வழங்கி வரும் நிலையில் அந்த இடத்தில் எந்த கதாநாயகியும் இல்லை என்றால் தவறாக இருக்கும் என எடுத்துரைத்து அந்த விழாவில் கலந்து விருதை வாங்கி கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.

கிழவனாக சினிமாவில் அறிமுகமாகி, 15 திரைப்படங்களையும் தயாரித்த வி.கே ராமசாமி குறித்து அறியாத பல தகவல்கள்!

முதலில் சரோஜாதேவி நடித்த படத்தின் விருது விழாவில் நான் எதற்கு கலந்து கொள்ள வேண்டும் என சாவித்திரி கேள்வி கேட்டுள்ளார். அதன் பின் படத்தின் கதாசிரியருக்கும் சாவித்திரிக்கும் இருந்த நடப்பு காரணமாக அந்த விழாவில் கலந்து கொள்ள சம்மதித்துள்ளார்.

அதன் பின் பெற்றால் தான் பிள்ளையா என்ற படத்தின் 100வது நாள் கொண்டாட்டத்தில் சாவித்திரி கலந்து கொண்ட போது அங்கு இருந்த அனைவரும் சரோஜாதேவி நடித்த படத்தின் விருது விழாவில் சாவித்திரி எதற்காக வந்துள்ளார் என குழப்பத்துடனும் வியப்புடனும் பார்த்துள்ளனர். அந்த அளவுக்கு இருக்குவருக்கும் இடையே உள்ள போட்டி ரசிகர்கள் மத்தில் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

 

மேலும் உங்களுக்காக...