கோடிக்கணக்கில் லாபம் பெற்ற அமிதாப் படம்.. ரீமேக் செய்து தோல்வி அடைந்த ரஜினிகாந்த்..!

By Bala Siva

Published:

ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று கோடிக்கணக்கில் லாபம் கிடைத்த நிலையில் அந்த படத்தை ரஜினியை வைத்து தமிழில் ரீமேக் செய்ய அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் இருந்தது படக்குழுவினர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

கடந்த 1975ஆம் ஆண்டு அமிதாப் பச்சன் நடித்த மிகப்பெரிய வெற்றி படம் ‘தீவார்’. இந்த படம் அந்த காலத்திலேயே ரூ.6 கோடி லாபம் பெற்றது. இந்த படத்தைதான் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் கழித்து தமிழில் தயாரிப்பாளர் கே.பாலாஜி ரீமேக் செய்தார். பின்னாளில் ‘பில்லா’ என்ற திரைப்படத்தை ரஜினி வைத்து எடுத்த கிருஷ்ணமூர்த்தி தான் இந்த படத்தை இயக்கினார்.

ஹாலிவுட் படத்தை தழுவி எடுத்த ரஜினியின் ‘கழுகு’.. ரசிகர்களுக்கு புரியாததால் தோல்வி அடைந்த பரிதாபம்..!

‘தீ’ என்று டைட்டில் வைக்கப்பட்ட இந்த படத்தில் ரஜினிகாந்த், சுமன், சௌகார் ஜானகி, ஸ்ரீபிரியா, மேஜர் சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார் என்றாலும் பாடல்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இருப்பினும் பின்னணி இசையில் அவர் பட்டையை கிளப்பி இருந்தார்.

deevar

1981ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தயாரிப்பாளர் கே.பாலாஜிக்கு அசல் பணமே கஷ்டப்பட்டு தான் வந்தது என்றும் கூறப்படுவது உண்டு.

இந்த படத்தின் கதை என்று பார்த்தால் தொழிற்சங்க தலைவர் மீது பேக்டரி முதலாளி பழியை போட்டு விட்டதால் அவமானம் காரணமாக அவர் இறந்து விடுவார். அவருடைய மனைவி சௌகார் ஜானகி இரண்டு குழந்தைகளை சென்னைக்கு அழைத்து வந்து வளர்ப்பார். ஒரு பக்கம் வேலைக்கு செல்லும் பெரிய பையன், இன்னொரு பக்கம் நன்றாக படிக்கும் சின்ன பையன் என்று வளருவார்கள். துறைமுகத்தில் வேலை பார்ப்பவராக ரஜினிகாந்த் வளர, நன்றாக படித்து போலீஸ் அதிகாரியாக அவரது தம்பி சுமன் வளர்ந்திருப்பார்.

ரஜினி நடித்த கேரக்டரில் எஸ்.வி.சேகர்.. துணிச்சலாக ரீமேக் செய்த விசு..!

ஒரு கட்டத்தில் துறைமுகத்தில் வேலை பார்க்கும் ரஜினி கொள்ளை கூட்டத்தில் இணைந்து அதில் வல்லவர் ஆவார். அதே சமயம் அந்த கொள்ளை கூட்டத்தை பிடிக்கும் பணி சுமனிடம் ஒப்படைக்கப்படும். அண்ணன், தம்பி நேருக்கு நேர் மோதும் சூழ்நிலை வர, இறுதியில் என்ன ஆனது என்பதுதான் இந்த படத்தின் கதை.

thee

ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் ஸ்டைலை காப்பி அடிக்காமல் தன்னுடைய பாணியில் வித்தியாசமாக நடித்திருப்பார். அவருடைய ஸ்டைல் காட்சிக்கு காட்சி சூப்பராக இருக்கும். இந்த படத்தில் இருந்து தான் அவர் மாஸ் நடிகரானார்.

விஜயகாந்த் படத்தின் ரீமேக்கில் நடித்த ரஜினிகாந்த்.. இரண்டு படங்களின் ரிசல்ட் என்ன தெரியுமா?

அதேபோல் சுமன், சௌகார் ஜானகி ஆகியோர்களது நடிப்பும் அசத்தலாக இருக்கும். ரஜினிக்கு ஜோடியாக ஸ்ரீபிரியா இந்த படத்தில் நடித்திருப்பார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்க வேண்டிய படம், ஆனால் திரைக்கதையில் ஆங்காங்கே சில ஓட்டைகள் இருந்ததால் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. இதனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இருப்பினும் இந்த படத்திற்கு பிறகு தான் ரஜினிக்கு சம்பளம் அதிகரித்தது. அடுத்தடுத்து ஆக்சன் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.