வருஷம் 16, காதலுக்கு மரியாதை, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு என அழுத்தமான, ஆழமான படங்களை இயக்கிய ஃபாசில், முழுக்க முழுக்க ஒரு காமெடி திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் அதுதான் பிரபு, ரேவதி நடித்த அரங்கேற்ற வேளை.
தமிழில் ஒரு முழு நீள காமெடி படம் என்றால் அது காதலிக்க நேரமில்லை என்று தான் சொல்லலாம். அதையடுத்து வெளியான படம் தான் அரங்கேற்ற வேளை. இந்த படத்தில் பிரபு, ரேவதி, வி.கே.ராமசாமி, ஜனகராஜ், ராசி, வெண்ணிற ஆடை மூர்த்தி, ஜெய்கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஃபாசில் இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவான இந்த படம் கடந்த 1990ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளியானது.
இந்த படத்தின் கதைப்படி தனது அப்பா இறந்துவிட்டதால் அந்த வேலையை வாங்க வேண்டும் என்று முயற்சியுடன் இருக்கும் பிரபு, அதே போல் தனது அப்பா விபத்தில் இறந்து விட்டதால் தனது குடும்பத்தை காப்பாற்ற ஒரு நல்ல வேலையை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் ரேவதி, பிரபுவை ஏமாற்றி பிரபுவுக்கு கிடைக்க வேண்டிய வேலையை வாங்கி அந்த வேலையில் நைசாக சேர்ந்த ராசி, நாடக கம்பெனி வைத்து நஷ்டம் அடைந்து மீண்டும் எப்படியாவது நாடகத்தை நடத்த வேண்டும் என்ற முடிவுடன் இருக்கும் வி.கே.ராமசாமி என இந்த நால்வருக்கும் தேவை பணம். அந்த சமயத்த்தில் எதிர்பாராத விதமாக ஒரு பெரிய தொகை கிடைத்தால் எப்படி இருக்கும் என்பதுதான் இந்த படத்தின் கதை.
தொழிலதிபர் சத்தியநாதன் என்பவரின் டெலிபோன் எண்ணும், சக்தி நாடக சபா என்ற நாடக சபாவின் டெலிபோன் எண்ணும் டெலிபோன் டைரக்டரியில் மாறி அச்சாகி இருக்கும். இதனால் சத்தியநாதனுக்கு வரும் அழைப்புகள் எல்லாம் சக்தி நாடக சபாவிற்கு வரும். அப்போதுதான் ஒருமுறை சத்தியநாதனிடம் பேசுவதாக நினைத்து மர்ம நபர் ஒருவர் பேசும்போது உங்கள் பெண்ணை கடத்தி வைத்திருக்கிறோம், ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால் உங்கள் பெண்ணை விட்டு விடுகிறோம் என்று கூறுவார்.
அந்த அழைப்பை எடுக்கும் பிரபு, எல்லோருடைய பணத்தையும் பூர்த்தி செய்யும் வகையில் ஒரு ஐடியா பண்ணுகிறார். அவர் சத்தியநாதனுக்கு போன் செய்து உங்கள் பெண்ணை நாங்கள் கடத்தி வைத்திருக்கிறோம், நான்கு லட்ச ரூபாய் கொடுத்தால் உங்கள் பெண்ணை விட்டு விடுவோம் என்று போன் செய்கிறார்.
குபீர் சிரிப்பு குமரிமுத்து.. தமிழ் சினிமா சரியாக பயன்படுத்தாத அற்புத கலைஞன்..!
சத்தியநாதனிடம் இருந்து 4 லட்ச ரூபாயை வாங்கி ஒரு லட்ச ரூபாயை அவருடைய பெண்ணை கடத்தியவனுக்கு கொடுத்துவிட்டு பெண்ணை மீட்டு, சத்தியநாதனிடம் ஒப்படைத்து விடலாம், நமக்கு மூன்று லட்ச ரூபாய் கிடைக்கும் என்பதுதான் பிரபுவின் திட்டம். இந்த திட்டம் பலித்ததா என்பதுதான் முழுக்க முழுக்க காமெடியான திரைக்கதையுடன் அமைந்த அரங்கேற்றவேளை படத்தின் கதை.
பிரபுவா இப்படி ஒரு முழு நீள காமெடி கதையில் என்று ஆச்சரியப்படும் வகையில் அவரது நடிப்பு இருக்கும். ரேவதி நடிப்பை பற்றி கூறவே வேண்டாம், ஒவ்வொரு முறையும் அவர் பிரபுவுடன் சண்டை போடுவதும், வி.கே.ராமசாமியிடம் காமெடி செய்வதும் செம காட்சிகள். குறிப்பாக கிளைமாக்ஸில் பணம் வந்தவுடன் அவர் எடுக்கும் திடீர் முடிவு ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியாக இருக்கும். வி.கே.ராமசாமி நடிப்பைப் பற்றி சொல்லவே வேண்டாம், மனிதர் புகுந்து விளையாடியிருப்பார்.
இந்த படம் மலையாளத்தில் வெளிவந்த ‘ராமோஜி ராவ் ஸ்பீக்கி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது போலவே இந்த படம் தமிழிலும் சூப்பர் வெற்றி பெற்றது. தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய லாபத்தை கொடுத்தது.
கவுண்டமணியை ஓரங்கட்ட கமல், ரஜினி கொண்டு வந்த காமெடி நடிகர்.. இப்போது அமெரிக்காவில் செட்டில்..!
இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அதில் ‘ஆகாய வெண்ணிலாவே’ என்ற பாடல் ஜேசுதாஸ், உமா ரமணன் குரலில் இன்றும் சொக்க வைக்கும் பாடலாக இருக்கும். இந்த படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கொடுத்தன. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று சாதனை செய்தது.