விஜய் கையால் விருது வாங்கிய ரஜினி! இது எப்போ நடந்தது… ரகசிய அப்டேட்!

தமிழ் திரையுலகின் பிரபலத்தின் உச்சியில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் தான் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் விஜய். இந்த இரண்டு ஹீரோக்களின் படங்களை கொண்டாடுவதற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் கூட்டமே உள்ளது. தற்பொழுது ரஜினி தனது…

தமிழ் திரையுலகின் பிரபலத்தின் உச்சியில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் தான் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் விஜய். இந்த இரண்டு ஹீரோக்களின் படங்களை கொண்டாடுவதற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் கூட்டமே உள்ளது. தற்பொழுது ரஜினி தனது 169 வது படமான ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது. அதை தொடர்ந்து பல படங்களில் முன்னணி இயக்குநர்களுடனும் கைகோர்க்க உள்ளார். 

நடிகர் விஜய் தனது 67வது படமான லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். அதை தொடர்ந்து வெங்கட் பிரபு படத்தில் இணைந்து நடிக்க உள்ளார். தளபதி விஜய் சமீப காலமாக நடிப்பை தொடர்ந்து அரசியலிலும் கால்பதித்து வருவது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக உள்ளது.

இந்நிலையில் இந்த முன்னணி ஹீரோக்களின் ரசிகர்களிடையே போட்டி நிலவுவது போல, கடந்த சில நாட்களாக ரஜினி மற்றும் விஜய்க்கு இடையே பட்டங்களுக்காக போட்டி நடைபெறுவதாக அடுத்தடுத்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற கேள்வியும் தற்பொழுது தீயாக பரவி வருகிறது. ரசிகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இந்த கேள்விக்கு தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ரஜினி மற்றும் விஜய் குறித்த சுவாரசியமான தகவல் ரகசியமாக வெளியாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விஜய் கையால் ரஜினி விருது வாங்கிய நிகழ்ச்சி தான் அது…

விஜய் நடித்த மெர்சல் படத்தின் ஷூட்டிங் முடிந்த பின் அந்த சமயத்தில் விகடன் ஒரு மிகப்பெரிய விருது நிகழ்ச்சி நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் ரஜினிக்கு யாரை வைத்து விருது கொடுக்கலாம் என்னும் பெரிய ஆலோசனை நடந்தது. அப்பொழுது கடைசியாக விஜய்யை வைத்து இந்த விருது வழங்கிடலாம் என முடிவு எடுக்கப்பட்டது.

இது குறித்து ரஜினிகாந்திடம் கேட்ட போது அதுக்கு ரஜினிகாந்த் அவர்கள் ஒன்றுமே சொல்லாமல், விஜய் கையால் விருதா ஆகா நான் வாங்குகிறேன் என கூறி ஓகே சொல்லி இருக்கிறார்.

இணையத்தில் அசுர சாதனை படைத்த ரஜினியின் காவாலா!

விருது வழங்கும் நிகழ்ச்சி நடக்கும் போது தளபதி விஜய் அந்த தருணத்தில் மேடையில் என் கையால் விருது வாங்க சம்மதித்த ரஜினி அவருடைய பெருந்தன்மைதான் இந்த இடத்தில் நின்று பேசுகிறது. அவர் என்னைக்குமே சூப்பர் ஸ்டார்தான் என பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிட்டத்தக்கது.