விஜயகாந்துக்கு முன்பே புரட்சிக்கலைஞர் பட்டம்.. ரஜினி படத்தில் ஹீரோ.. 80களில் கோலோச்சிய விஜயகுமார்..!

தற்போது புரட்சிக்கலைஞர் என்றால் உடனே அனைவருக்கும் விஜயகாந்த் பெயர்தான் ஞாபகம் வரும். ஆனால் விஜயகாந்த்துக்கு முன்பே புரட்சி கலைஞர் என்ற பட்டத்தை பெற்றவர் தற்போது பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வரும் விஜயகுமார்…

vijayakumar

தற்போது புரட்சிக்கலைஞர் என்றால் உடனே அனைவருக்கும் விஜயகாந்த் பெயர்தான் ஞாபகம் வரும். ஆனால் விஜயகாந்த்துக்கு முன்பே புரட்சி கலைஞர் என்ற பட்டத்தை பெற்றவர் தற்போது பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வரும் விஜயகுமார் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.

விஜயகுமார் ஆரம்ப கட்டத்தில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் பெரிய நடிகர்களுடன் இணைந்து நடித்தார். சிவாஜி கணேசன், பத்மினி நடித்த ஸ்ரீ வள்ளி என்ற படத்தில் அவர் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு கந்தன் கருணை என்ற படத்தில் முருகன் வேடத்தில் நடிக்க இருந்தார். ஆனால் அந்த கேரக்டர் அதன் பின்னர் சிவக்குமாருக்கு சென்றது.

இந்த படத்தில் நடித்த ஒருவர் கூட மேக்கப் போட்டு நடிக்கவில்லை.. இப்படி ஒரு சிவாஜி கணேசன் படமா?

vijayakumar3

இந்த நிலையில்தான் ‘பொண்ணுக்கு தங்க மனசு’ என்ற படம் அவருக்கு திருப்புமுனையை கொடுத்தது. இந்த படத்தின் ஹீரோ சிவகுமாராக இருந்தாலும் விஜயகுமார் நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்தது. இதனை அடுத்து எம்ஜிஆர் உடன் ‘இன்று போல் என்றும் வாழ்க’, சிவாஜி கணேசன் உடன் ‘தீபம்’ கமல்ஹாசன் உடன் ‘நீயா’ ஆகிய படங்களில் நடித்தார். அவர் ஹீரோவாகவும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

vijayakumar21

கமல், ரஜினி வளர்ந்து கொண்டு வந்த நிலையில் விஜயகுமார் பிரபல நடிகராக இருந்தார். ‘மாங்குடி மைனர்’ என்ற திரைப்படத்தில் விஜயகுமார் ஹீரோவாக நடித்தார். அந்த படத்தில் இரண்டாவது ஹீரோவாக ரஜினிகாந்த் நடித்தார். இந்த படம் கிட்டத்தட்ட அதிமுகவின் பிரச்சார படம் போல் இருந்தது. கழுத்தில் எம்ஜிஆர் டாலரை அணிந்து அவர் நடித்திருந்தார்.

vijayakumar4

இந்த நேரத்தில் தான் அவர் நடித்த படங்களுக்கு புரட்சிக்கலைஞர் என்ற பட்டம் போடப்பட்டது. எழுபதுகளின் இறுதிகளில் வெளியான பல விஜயகுமார் படங்களில் புரட்சிக்கலைஞர் என்ற டைட்டிலோடு தான் படம் வெளியானது.

சிவாஜி கணேசனுடன் ரஜினி, கமல் நடித்த படங்கள் இத்தனையா?

vijayakumar1

ஆனால் அடுத்தடுத்து கமல், ரஜினி ஆகிய இருவரும் வளர்ச்சி அடைந்த நிலையில் எம்ஜிஆர், சிவாஜிக்கு பிறகு கமல், ரஜினி என்பது உறுதியானது. அதன் பிறகு தான் விஜயகுமார் படங்கள் குறைய ஆரம்பித்த நிலையில் அவர் வில்லன் வேடத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

கமல், ரஜினி படங்கள் உள்பட பல படங்களில் வில்லனாக நடித்த விஜயகுமார் சில படங்களில் குணசத்திர வேடங்களில் நடித்தார். அவருக்கு அளிக்கப்பட்ட புரட்சிக் கலைஞர் பட்டமும் மறந்துவிட்டது.

vijayakumar2

விஜயகுமாரின் இரண்டாவது இன்னிங்ஸ் என்றால் ‘அக்னி நட்சத்திரம்’ திரைப்படத்தை சொல்லலாம். பிரபு மற்றும் கார்த்திக் ஆகிய இருவருக்கும் தந்தையாக குணசுத்திர கேரக்டரில் நடிப்பில் மிரட்டி இருப்பார். அதன் பிறகு அவருக்கு பல திரைப்படங்களில் குணசேத்திர கேரக்டர் கிடைத்தது. அவை அனைத்தும் அவருக்கு மிகப்பெரிய புகழை பெற்று தந்தது. குறிப்பாக சேரன் பாண்டியன், நாட்டாமை, கிழக்கு சீமையிலே ஆகிய படங்கள் விஜயகுமாருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது.

பாதியில் நின்ற சிவாஜி படம்.. எம்ஜிஆர் படத்தை எடுத்து அதில் கிடைத்த லாபத்தில் மீண்டும் தொடக்கம்..

திரைப்படங்களில் மட்டுமின்றி தொலைக்காட்சி சீரியல்களிலும் அவர் நடித்தார். குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான தங்கம், வம்சம், நந்தினி, ராசாத்தி ஆகிய சீரியல்கள் நல்ல வரவேற்பு பெற்றது. இன்றும் தமிழ் திரையுலகில் சிறந்த குணச்சித்திர நடிகர்களுள் ஒருவராக விஜயகுமார் இருக்கிறார்.