பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா 3,200 கோடி ரூபாய்க்கு சொந்தமானவர். அவர் தனது மருமகள் சமந்தா விவாகரத்து செய்ய முடிவு செய்த போது எத்தனை கோடி வேண்டும் என்று ஜீவனாம்சமாக வேண்டும் என்று கேட்டவர். ஆனால் சமந்தா ஒரு பைசா கூட எனக்கு வேண்டாம் என்று கூறிவிட்டு வெளியே வந்தார் என்றும் கூறப்படுகிறது.
தெலுங்கு திரையுலகில் காலம் காலமாக, வாரிசு வாரிசுகளாக திரையுலகில் இருக்கும் குடும்பங்களில் ஒன்றுதான் நாகார்ஜுனாவின் குடும்பம். நாகார்ஜுனாவின் தந்தை நாகேஸ்வர ராவ், நம்மூர் சிவாஜி அளவுக்கு தெலுங்கு திரையுலகில் பிரபலமானவர். அவர் பல வெற்றி படங்களை தெலுங்கு திரை உலகில் கொடுத்திருக்கிறார்.
இந்த நிலையில்தான் நாகேஸ்வரராவின் ஐந்து குழந்தைகளில் ஒருவரான நாகார்ஜுனாவை திரை உலகில் அறிமுகப்படுத்த அவரது குடும்பத்தினர் முடிவு செய்கின்றனர். முதல் முறையாக அவர் 1986ஆம் ஆண்டு ‘விக்ரம்’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் நாகார்ஜுனா நடித்தார். அந்த படம் ஓரளவு வரவேற்பு பெற்ற பிறகு ‘கேப்டன் நாகார்ஜுன்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்தார்.

அப்போதுதான் அவர் 1989ஆம் ஆண்டு ‘கீதாஞ்சலி’ என்ற திரைப்படத்தில் நடித்தார். நாகார்ஜுனா, கிரிஜா நடிப்பில் இளையராஜா இசையில் மணிரத்னம் இயக்கத்தில் இந்த படம் உருவானது. இந்த படம் தமிழில் ‘இதயத்தை திருடாதே’ என்ற பெயரிலும் வெளியானது.
இந்த படம்தான் நாகார்ஜுனாவின் முதல் சூப்பர் ஹிட் படமாகும். இந்தப் படம் ஆந்திராவின் பல நகரங்களில் 150 நாட்களை தாண்டி ஓடியது. டப்பிங் படம் என்ற வாடையே இல்லாமல் தமிழிலும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இதன் பிறகு நாகார்ஜுனா தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரானார். பல வெற்றி படங்களையும், அதிரடி ஆக்சன் படங்களையும் கொடுத்தார். இந்த நிலையில்தான் இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் அறிமுகம் கிடைத்தது. அவருக்கு முதல் முதலில் வாய்ப்பு கொடுத்தது நாகார்ஜுனாதான் என்பதும் ஒரு ஆச்சரியமான தகவல்.
நாகார்ஜுனாவை வித்தியாசமாக காண்பிக்க வேண்டும் என்ற ஐடியா முதன் முதலில் வந்தது ராம்கோபால் வர்மா அவர்களுக்குதான். அவரது இயக்கத்தில் 1989ஆம் ஆண்டு ‘சிவா’ என்ற திரைப்படம் உருவானது. நாகார்ஜுனா, அமலா நடிப்பில் உருவான இந்த படம் மிகப்பெரிய ஹிட்டானது. இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் ரகுவரன் நடித்திருப்பார்.

இந்த நிலையில்தான் நாகார்ஜுனாவுக்கு லட்சுமி என்பவருடன் திருமணம் நடைபெறுகிறது. இன்றைய பிரபல நடிகராக இருக்கும் ராணாவின் சொந்த அத்தையும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான ராமநாயுடு மகள் தான் இந்த லட்சுமி. ஆனால் ஒரு சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். இந்த தம்பதியின் மகன்தான் நாக சைதன்யா.
இதனை அடுத்து தன்னுடன் பல படங்களின் ஜோடியாக நடித்த அமலாவை நாகார்ஜுனா திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு பிறந்த மகன்தான் அகில்.
திருமணத்திற்கு பின்னர் அமலா நடிப்பதை நிறுத்திவிட்டாலும் நாகார்ஜுனா தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் பல படங்களையும் தயாரித்துள்ளார்.
தெலுங்கில் மட்டுமின்றி தமிழிலும் சில படங்கள் நாகார்ஜுனா நடித்தார். அவற்றில் முக்கியமான படம் ‘ரட்சகன்’. கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில் உருவான இந்த படம் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கும். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பிரவீன் காந்தி இயக்கத்தில் உருவான இந்த படம் அந்த காலத்திலேயே 15 கோடியில் தயாரிக்கப்பட்டது. இந்த படத்தின் நாயகியாக உலக அழகி சுஷ்மிதா சென் நடித்திருந்தார். இதனை அடுத்து ‘பயணம்’, ‘தோழா’ உள்ளிட்ட ஒரு சில தமிழ் படங்களில் இவர் நடித்துள்ளார்.
நாகார்ஜுனாவுக்கு அன்னபூர்ணா ஸ்டுடியோ என்ற பிரமாண்டமான ஸ்டுடியோ ஆந்திராவில் சொந்தமாக உள்ளது. பல தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்கள் இந்த ஸ்டுடியோவில்தான் படமாக்கப்பட்டு வருகிறது.
நாகார்ஜுனாவின் மொத்த சொத்து மதிப்பு 3200 கோடி என்று கூறப்படுகிறது. ஆந்திராவில் மட்டுமில்லாமல் இந்தியாவில் உள்ள பல பகுதிகளில் இவருக்கு பிசினஸ் உண்டு.
நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா, நடிகை சமந்தாவை காதலித்தார். ஆரம்பத்தில் இதற்கு நாகார்ஜுனா எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் நாக சைதன்யா தனது காதலில் உறுதியாக இருந்ததை அடுத்த திருமணம் செய்து வைத்தார்.
ஆனால் ஒரு சில ஆண்டுகளில் இருவரும் பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது நாகார்ஜுனா சமந்தாவிடம் உங்களுக்கு எத்தனை கோடி ஜீவனாம்சம் வேண்டும் என்று கேட்டபோது ஒரு பைசா கூட வேண்டாம் என்று சொல்லிவிட்டு சமந்தா வெளியேறியதுதான் நாகார்ஜுனா குடும்பத்திற்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது.
ஒரு கட்டத்தில் நாகார்ஜுனா தனது மருமகளை மிஸ் செய்து விட்டோமோ என்று எண்ணியதாகவும், நாக சைதன்யாவும் அவசரப்பட்டு விவாகரத்து செய்து விட்டோமா என்று வருந்தும் அளவுக்கு சமந்தா நடந்து கொண்டார் என்று கூறப்படுவதுண்டு.

இந்த நிலையில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு நாகார்ஜுனாவுக்கு கிடைத்தது. நம்மூரில் கமல் தொகுத்து வழங்குவது போல் பிக்பாஸ் நிகழ்ச்சியை தெலுங்கில் மிகவும் சிறப்பாக தொகுத்து வழங்கினார். அதற்காக அவருக்கு பல கோடி சம்பளம் கொடுக்கப்பட்டது.
இந்த கிளைமாக்ஸ் ரஜினிக்கு செட் ஆகாது.. கணித்து சொன்ன நடிகர்.. மாற்ற மறுத்ததால் தோல்வி அடைந்த படம்..!
தெலுங்கு திரை உலகில் முடிசூடா மன்னனாக இருக்கும் நாகார்ஜுனா குடும்பத்தினர் வழிவழியாக திரையுலகில் ஆதிக்கம் செலுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
