ஜோரான ஜோஜோபா எண்ணெய்… சருமம், கூந்தல் என அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வு!

By Sowmiya

Published:

ஜோஜோபா எண்ணெய் என்பது வட அமெரிக்காவின் பாலைவனப் பகுதியில் இருந்து பெறக்கூடிய ஒரு எண்ணெயாகும். ஜோஜோபா என்ற தாவரத்தின் விதையில் இருந்து கோல்ட் பிரஸ் முறையில் இந்த எண்ணெய் பெறப்படுகிறது. இதனை எண்ணெய் என்று நாம் கருதினாலும் இது உண்மையில் ஒரு மெழுகு போன்ற பொருளாகும். ஜோஜோபா எண்ணெயை பிற எண்ணெயுடன் கலந்தோ அல்லது இந்த எண்ணெயை மட்டும் தனித்தோ பயன்படுத்தலாம். ஜோஜோபா எண்ணெய் தொடர்ந்து சருமத்துக்கும், கூந்தலுக்கும் பயன்படுத்தினால் மென்மையான முகப்பருவற்ற சருமம் பெறுவதோடு நல்ல ஆரோக்கியமான பளபளப்பான கூந்தலும் தரக்கூடியது.

istockphoto 1442550946 612x612 1

ஜோஜோபா எண்ணெய் தரும் நன்மைகள்:

1. சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்:

ஜோஜோபா எண்ணெய் சருமத்தின் மேற்பரப்பில் நீரினை உறிஞ்சி வைத்திருக்க கூடிய தன்மை கொண்டது. இதனால் சருமம் நீரேற்றத்துடன் காணப்படும். பாக்டீரியா தொற்றுகள் ஏற்படாத வண்ணம் சருமத்தை காக்கும். கூந்தலிலும் பொடுகு தொல்லை உண்டாகாமல் பாதுகாக்கும்.

2. ஆன்டி பாக்டீரியல்:

சருமத்துக்கு கேடு விளைவிக்கும் பாக்டீரியாக்களையும் பூஞ்சைகளையும் அளிக்கிறது. ஜோஜோபா எண்ணெய் அனைத்து பாக்டீரியாக்களையும் கொல்லுவதில்லை சில நல்ல பாக்டீரியாக்களை இவை அழிப்பது இல்லை.

3. ஆன்டிஆக்ஸிடன்ட்:

ஜோஜோபா எண்ணெயில் விட்டமின் ஈ அதிகம் உள்ளது. இது மன அழுத்தத்தால் முகத்தில் உண்டாகும் சுருக்கங்களை சரி செய்து காக்கும். மாசுபாட்டால் முகம் சேதமடையாமல் காக்கிறது.

உங்களுக்கு முகத்தில் எப்போதும் எண்ணெய் வடிகிறதா.. கவலை வேண்டாம் எண்ணெய் சருமம் உடையவர்களுக்கு எளிய வீட்டு குறிப்புகள்!

4. கொலாஜன் உற்பத்தியை அதிகரித்தல்:

கொலாஜன் என்பது சரும பராமரிப்பில் உள்ள ஒரு முக்கிய புரதம் ஆகும். இதில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்கள் கொலாஜன் உற்பத்திக்கு வழி வகுத்து சருமத்தை காக்கிறது. முகம் முதுமை அடைந்தது போல் தோற்றம் பெறாமல் என்றும் இளமையாய் வைத்திருக்க இது உதவும்.

5. காயங்கள் சரிசெய்தல்:

ஜோஜோபா எண்ணெய் சருமத்தில் உண்டாகும் காயங்களை இயற்கையாகவே சரி செய்யக்கூடிய தன்மை வாய்ந்தது. பிளவு பட்ட சருமத்தை இணைக்கும் ஆற்றல் இந்த ஜோஜாபா எண்ணெய்க்கு உண்டு. சருமத்தில் கீறல்கள், வெட்டுகள் போன்ற காயங்கள் இருந்தால் அதன் மீது இந்த ஜோஜோபா எண்ணெய் பயன்படுத்தினால் இருந்த இடம் தெரியாமல் அவை மறைந்து போகும்.

6. சுருக்கங்கள் மற்றும் கருமையை அகற்றும்:

வயது முதிர்வால் முகத்தில் உண்டாகும் சுருக்கங்களையும், சூரிய ஒளியால் முகத்தில் ஏற்படும் கருமைகள், மாசினால் உண்டாகும் கரும்புள்ளிகள் போன்றவற்றை அகற்ற ஜோஜோபா ஆயில் சிறந்தது. இதில் இயற்கையாகவே உள்ள விட்டமின் ஈ மற்றும் ஆன்டி-ஆக்சிடென்ட்கள் இந்த வேலையை செய்கின்றன.

istockphoto 1432664285 612x612 1

7. கூந்தல் பராமரிப்பில் ஜோஜோபா எண்ணெய்:

ஜோஜோபா எண்ணெயை தலையில் நன்கு மசாஜ் செய்து 20 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளித்து வந்தால் பொடுகு தொல்லையில் இருந்து நிரந்தரமாக தீர்வு காணலாம். மேலும் முடியில் கிளை வெடித்தல் பிரச்சனை உள்ளவர்களுக்கு இதில் உள்ள அமிலங்கள் சரியான தீர்வினை தருகின்றன. கூந்தல் பளபளப்பாகவும் கண்டீஷனிங் செய்தது போல தோற்றம் தரும்.

8. ஒப்பனை நீக்கி:

முகத்தில் ஒப்பனை செய்பவர்கள் நீண்ட நேரம் அந்த ஒப்பனையை முகத்தில் வைத்திருந்த பல்வேறு சரும பிரச்சனை ஏற்படும் அதை முறையாக நீக்கி முகத்தை கழுவ வேண்டும். ஜோஜோபா எண்ணெய் மிகச் சிறந்த ஒப்பனை நீக்கி ஆகும். ஜோஜோபா எண்ணெயை ஒரு காட்டனில் நனைத்து ஒப்பனை செய்த முகத்தில் துடைக்க ஒப்பனை எளிதில் நீக்கி விடலாம்.