முழுக்க முழுக்க ஞானியாக மாறிய வெங்கட் பிரபு! என்ன கொடுமை சார் இது …

பொதுவாக வெங்கட் பிரபு தன் படத்தை இயக்குவதில் உள்ள ஆர்வத்தை விட வாழ்க்கையை ஜாலியாக அனுபவிப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவர். மேலும் அதை தான் முழுநேர வேலையாக பார்க்க கூடியவர் என்பது நம்ம எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான்.

படப்பிடிப்பின் போது எந்த அளவுக்கு உழைக்கிறார்களோ அதே போல படப்பிடிப்பு நேரம் முடிந்ததும் தனது கொண்டாட்டத்தை தொடக்கி விடுவதை வழக்கமாக கொண்டவர் வெங்கட் பிரபு . இப்படி இருந்த வெங்கட் பிரபு அவர்கள் தற்போழுது திடீர் என முற்றும் திறந்த ஒரு முனிவரா மாறிவிட்டார்.

ஆனால் இந்த மாற்றத்திற்கு காரணம் வேற யாருமே கிடையாது தளபதி விஜய் அவர்கள் தான். விஜய்யின் கால்ஷீட் கிடைத்ததால் தான் இப்படி ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

தற்போது வெங்கட் பிரபு பரபரப்பாக கதை தயார் செய்யும் பணியில் தனது குழுவுடன் ஈடுபட்டுள்ளார். விஜய்யின் 68 படத்திற்காக அவர் கூறிய ஒன் லைன் கதை முழுமையான அமைப்பை இன்னும் பெறாததே இதற்க்கு காரணம் ஆகும் . அதனால் மது, பார்ட்டி போன்ற எல்லாத்தையுமே அறவே மறந்து இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

சில நாட்களுக்கு முன் இயக்குனர் விக்னேஷ் சிவன் கதை திருப்தியாக இல்லாததும், கதைக்காக அவர் முழு முயற்சி எடுக்காதது அறிந்து அஜித் அவர்கள் படத்தை கைவிட்டது குறிப்பிடத்தக்கது. இது போன்ற தகவல்களால் நமது படத்திற்கும் இந்த நிலைமை வரக்கூடாது என கடுமையான முயற்சியுடன் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

ஜெயிலர் படத்தின் பாடல் வெளியாகும் முன்பே பாராட்டி தள்ளிய விஜய்!

மேலும் தளபதி அவர்கள் எந்த நேரத்திலும் இவரை கூப்பிட்டு கதை தயாராக இருக்கிறதா என கேட்க வாய்ப்புள்ளதாகவும், அதற்கு சரியான ரெஸ்பான்சிபில் உடன் இருக்க வேண்டும் என்பதற்காக முழு முயற்சியில் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உலகம் சுற்றும் வாலிபராக எல்லாவற்றையும் என்ஜாய் பண்ணிட்டு ஜாலியா இருந்த வந்த வெங்கட் பிரபு விஜய் அவர்களுடைய 68 படத்திற்க்காக ரொம்பவே சீரியஸா இருக்கிறது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வெங்கட் பிரபு – விஜய் கூட்டணியில் உருவாகும் படத்திற்க்காக கதாநாயகிகள் தேர்வு செய்யும் பணியும் ஒரு பக்கமாக நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பட பிடிப்பு அக்டொபர் மாதம் தொடங்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.