ரூ.11,000 தள்ளுபடியில் கிடைக்கும் Xiaomi 11 Lite NE 5G.. முழு விவரங்கள்..!

Xiaomi நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட் போன் இந்தியாவில் அறிமுகமானபோது ரூ.31,999 என்ற விலை இருந்த நிலையில் தற்போது 11 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி விலையில் அதாவது 34 சதவீதம் தள்ளுபடி விலையில் கிடைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இதன் புதிய விலை ரூ.20,999 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த ஸ்மார்ட் போனின் சிறப்பம்சங்களை தற்போது பார்ப்போம்.

Xiaomi 11 Lite NE 5G ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இதோ:

பழைய மொபைலை விற்கும் முன் ரீசெட் செய்வது எப்படி? முழு விவரங்கள்..!

* 55-இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 1080 x 2400 ரெசலூசன்
* Qualcomm Snapdragon 778G 5G பிராசசர்
* 6 ஜிபி அல்லது 8 ஜிபி ரேம்
* 128 ஜிபி அல்லது 256 ஜிபி ஸ்டோரேஜ்
* 64MP பிரதான கேமரா, 8MP அல்ட்ராவைடு கேமரா, 5MP டெலிமேக்ரோ கேமரா
* 20MP செல்பி கேமிரா
* 4250mAh பேட்டரி, 33W பாஸ்ட் சார்ஜிங் பேட்டரி
* ஆண்ட்ராய்டு 11, எம்ஐயுஐ 12.5 ஆப்பரேட்டிங் சிஸ்டம்:

மேலும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார், NFC மற்றும் USB-C போர்ட் ஆகிய வசதிகளும் இந்த ஸ்மார்ட்போனில் உண்டு. பப்பில்கம் ப்ளூ, பீச் பிங்க், ஸ்னோஃப்ளேக் ஒயிட் மற்றும் ட்ரஃபிள் பிளாக் ஆகிய நான்கு வண்ணங்களில் கிடைக்கும்.

Xiaomi 11 Lite NE 5G நிறைகள் மற்றும் குறைகள் இதோ:

ரூ.8499 விலையில் ஒரு சூப்பரான ரெட்மி ஸ்மார்ட்போன்.. தவறவிடாதீர்கள்..!

நிறைகள்:

* இலகுரக மற்றும் மெலிதான வடிவமைப்பு
* பிரகாசமான மற்றும் வண்ணமயமான காட்சி
* சக்திவாய்ந்த செயல்திறன்
* நீண்ட கால பேட்டரி
* மலிவு விலை

குறைகள்:

* விரிவாக்கக்கூடிய சேமிப்பு இல்லை
* ஹெட்ஃபோன் ஜாக் இல்லை
* கேமரா செயல்திறன் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.

ரூ.2000க்குள் நோக்கியாவின் சூப்பர் மொபைல்.. 2 நாள் சார்ஜ் நிற்கும்..!

மொத்தத்தில் Xiaomi 11 Lite NE 5G ஸ்மார்ட்போன் நல்ல டிஸ்ப்ளே மற்றும் பேட்டரி ஆயுள் கொண்ட, சக்திவாய்ந்த பிராசசர் மொபைல் தேடுபவர்களுக்கு ஒரு சிறப்பான தேர்வாகும்.