ஒரு நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்தவுடன் பலருக்கும் ஏற்படும் குழப்பம் எந்த மாதிரியான உடை அணிவது என்பதில்தான். உடையில் கவனம் செலுத்துவது அவ்வளவு முக்கியமா? என்று யோசித்தால்… ஆம்! உடை மிக முக்கியமான ஒன்றுதான்.
ஒருவர் பார்த்த உடனேயே அவரது நன்மதிப்பைப் பெற வேண்டுமென்றால் நேர்த்தியான உடை மிகவும் அவசியமாகிறது.
வேலைக்கு விண்ணப்பிக்க ரெஸ்யூம் தயார் செய்கிறீர்களா? இதை ஒரு முறை படிச்சிடுங்க…!
நேர்முகத் தேர்வுக்கு எப்படி உடை அணிவது:
1. வேலையைப் பற்றி ஆராய்தல்:
எந்த மாதிரியான வேலைக்கு நேர்முகத் தேர்வுக்கு செல்ல போகிறோம் என்பதை முதலில் ஆராய்ந்து அதற்கு தகுந்தார் போல் உடையை தேர்வு செய்ய வேண்டும். அதே வேலைக்குச் செல்பவர் யாரேனும் இருந்தால் அவர்களிடம் எந்த மாதிரியான உடையை வேலைக்கு அணிகிறார்கள் என்பதை கேட்டு தெரிந்து அதேபோன்ற ப்ரொஃபஷனலான உடையை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.
2. வசதியான உடையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுதல்:
நேர்முகத் தேர்வுக்கு அணியும் உடையானது உங்களுக்கு வசதியானதாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். நேர்முகத் தேர்வு நீண்ட நேரம் நடைபெறலாம் நீங்கள் அணிந்திருக்கும் உடை உங்கள் கவனத்தை நேர்முகத் தேர்வில் மட்டுமே வைத்திருக்க உதவ வேண்டும். உடையில் ஏதேனும் அசௌகரியம் இருந்தால் உங்களால் நேர்முகத் தேர்வில் கவனம் செலுத்த இயலாது போகலாம்.
3. பொருத்தமான நிறத் தேர்வு:
உடையானது சரியான நேரத்தில் தேர்ந்தெடுக்க வேண்டும். மிகவும் சோர்வான நிறத்தில் இருந்தால் நம்மை புத்துணர்ச்சி அற்றவர்களாக தோன்றச் செய்துவிடும் அதே சமயம் கண்களை கூச செய்யும் அளவிற்கு நிறத்தை தேர்வு செய்யக்கூடாது. ஒவ்வொரு நிறமும் நம்மை ஒவ்வொரு விதமாக அடையாளப்படுத்தும் எனவே அதற்கு தகுந்தார் போல் நிறத்தேர்வில் கவனம் செலுத்தவும்.
4. உடையின் அளவு உங்களுக்கு சரியானதாக இருக்க வேண்டும்:
உடை உங்களுக்கு சரியாக பொருந்தி போவதாக இருக்க வேண்டும். மிகவும் இறுக்கமான ஆடைகளையும் அல்லது தொளதொளவென்ற ஆடைகளையும் தவிர்க்கவும். ஆடை சரியாக பொருத்தினால் தன்னம்பிக்கை அதிகம் ஏற்படும்.
5. எளிமையான அணிகலன்கள்:
நீங்கள் அணிந்திருக்கும் அணிகலன்கள் எளிமையானதாக இருக்க வேண்டும். நேர்முகத் தேர்வின் போது கவனத்தை சிதறச் செய்ய விடாதபடி உங்கள் அணிகலன் இருத்தல் அவசியம். கைக்கடிகாரம், மெல்லிய கைச்செயின் சிறிய சங்கிலி என குறைந்த அளவிலான அணிகலன்கள் போதுமானது.
6. காலணிகள்:
காலணியில் பெரும்பாலும் கவனம் செலுத்த தவறி விடுவோம். அவ்வாறு இல்லாமல் அணிந்து கொள்ளும் காலணியும் ஃபார்மலாக இருக்கும்படி தேர்வு செய்யவும். ஃபிளிப் ஃப்ளாப், ஸ்னீக்கர்ஸ் போன்றவற்றை தவிர்க்கவும். சாக்சானது உங்களுடைய ஷூவுக்கு பொருந்தி போகும் படி இருக்க வேண்டும்.
தவிர்க்க வேண்டியவை:
- ஸ்போர்ட்ஸ் காலணிகள்
- கசங்கியது போல் தோற்றம் தரக்கூடிய சட்டைகள்.
- அளவுக்கு அதிகமான வாசனை திரவியங்கள்.
- ஹெட் போன் போன்ற பொருட்கள்.
லேசான ஒப்பனையுடன் மிதமான வாசனை திரவியத்தை உபயோகித்து நல்ல சுத்தமான ஆடையை அயன் செய்து அணிவித்தால் நேர்முகத் தேர்வில் உயர் அதிகாரியின் நன்மதிப்பை பெறலாம் என்பதில் ஐயமே இல்லை.