19 வயதில் ஹீரோயினியாக சினிமாவில் அடியெடுத்து வைத்த நடிகை நஸ்ரியா, ஒரே ஒரு வருடம் மட்டுமே நடித்த நிலையில் 20வது வயதில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்வில் செட்டில் ஆகிவிட்டார்.
மலையாள திரையுலகின் நடிகையான நஸ்ரியா நசீம் கடந்த 2006 ஆம் ஆண்டிலிருந்து குழந்தை நட்சத்திரமாக சில படங்கள் நடித்தார். அதன் பிறகு ’நேரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தான் அவர் நாயகியாக அறிமுகமானார். தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் உருவாகிய இந்த படம் இரண்டு மொழிகளிலும் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பாதித்து கொடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கமல், ரஜினியை காக்க வைத்த நடிகை.. ஒரு கிராமத்தை தத்தெடுத்த அதிசயம்..!

இந்த படத்தின் வெற்றியை அடுத்து அட்லீ இயக்கிய முதல் திரைப்படமான ’ராஜா ராணி’ திரைப்படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார். இன்னொரு நாயகியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்திருந்தார்.
இதனை அடுத்து தனுஷ் ஜோடியாக ’நய்யாண்டி’ என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த நிலையில் பகத் பாசிலுக்கு மனைவியாக ’பெங்களூர் டேஸ்’ என்ற திரைப்படத்தில் நடிக்கும் போது தான் இருவருக்கும் இடையே நட்பு மற்றும் காதல் ஏற்பட்டது.

இதனை அடுத்து இருவருமே தங்கள் வீட்டில் தங்களது காதலை சொல்ல இரு வீட்டிலும் காதலுக்கு ஒப்புக்கொண்டனர். இதனை அடுத்து பகத் பாஸில் – நஸ்ரியா திருமணம் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது.
ஒரே நடிகருடன் ஜோடியாக 130 படங்கள்.. கின்னஸ் சாதனை செய்த நடிகை..!
இந்த திருமணத்திற்கு மம்மூட்டி, மோகன்லால் உள்பட பல பிரமுகர்கள் வருகை தந்திருந்தனர். நஸ்ரியாவை விட பகத் வாசலுக்கு 12 வயது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திருமணம் ஆகி கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகிய நிலையிலும் இன்னும் நஸ்ரியாவுக்கு குழந்தை பிறக்கவில்லை என்று கூறப்படுகிறது. பத்து ஆண்டு ஆகியும் ஏன் குழந்தை பெறாமல் இருக்கிறார் என்பது அவரது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. இருப்பினும் அவர் விரைவில் குழந்தை பெற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருமணத்திற்கு பிறகு திரை உலகிற்கு முழுக்கு போட்ட அவர் நான்கு ஆண்டுகள் நடிக்கவில்லை. அதன் பிறகு ஒருசில மலையாள திரைப்படங்களில் நடித்தார். சமீபத்தில் தெலுங்கு திரைப்படம் ஒன்றிலும் நடித்துள்ளார்.
சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி அவர் ஒரு சில திரைப்படங்களை தயாரித்தும் உள்ளார். பகத் பாசில் ஹீரோவாக நடித்த மூன்று படங்களை அவர் தயாரித்து உள்ளார்.
19 வயதில் திரையுலகில் உச்சத்தில் இருக்கும்போது நஸ்ரியா இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்தார். நஸ்ரியாவுக்கு தமிழ் மற்றும் மலையாள ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். இவர் திரையுலகில் குறைந்தது 10 ஆண்டுகள் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ஒரே ஆண்டில் திருமணம் செய்து கொண்டு கிட்டத்தட்ட சினிமாவுக்கு முழுக்கு போட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால் அதே நேரத்தில் நடிப்பு மற்றும் வருமானத்தை விட தனது காதல்தான் முக்கியம் என்றும் அந்த நேரத்தில் நான் திருமணம் செய்யாமல் திரைப்பட வாய்ப்புகளை முக்கியத்துவமாக கொண்டிருந்தால் பகத் பாசிலை நான் இழந்திருப்பேன் என்றும் ஏனென்றால் பகத்பாசிலுக்கு வேறு பெண் பார்க்க தொடங்கிவிட்டதால் தான் நான் அவசர அவசரமாக என்னுடைய பெற்றோரிடம் கூறி திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய சொன்னேன் என்றும் அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
காதல் கணவரா அல்லது சினிமாவா என்ற நிலை வந்த போது எந்த விதமான குழப்பமும் இன்றி அவர் காதல் கணவர் தான் என்பதை முடிவு செய்து பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
