விருச்சிகம் ஜூலை மாத ராசி பலன் 2023!

விருச்சிக ராசி அன்பர்களே ஜூலை மாதத்தினைப் பொறுத்தவரை சூர்யன் 8 ஆம் இடத்தில் இருந்து 9 ஆம் இடத்திற்குப் பெயர்கிறார். சூர்ய பகவான் 8 ஆம் இடத்தில் இருந்து 10 ஆம் இடத்திற்கு நகர்கிறார்; …

viruchigam

விருச்சிக ராசி அன்பர்களே ஜூலை மாதத்தினைப் பொறுத்தவரை சூர்யன் 8 ஆம் இடத்தில் இருந்து 9 ஆம் இடத்திற்குப் பெயர்கிறார். சூர்ய பகவான் 8 ஆம் இடத்தில் இருந்து 10 ஆம் இடத்திற்கு நகர்கிறார்;  வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை தொய்வு நிறைந்ததாக உணர்வீர்கள்.

தொழில் ரீதியாக எடுத்துக் கொண்டால் மந்தநிலையிலேயே இருக்கும்; பெரிய அளவிலான நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் முதலீடுகளைச் செய்யும்போது ஒருமுறைக்குப் பலமுறை ஆராய்ந்து செய்தல் வேண்டும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

எடுக்கும் முயற்சிகளில் இழுபறி இருந்துகொண்டே இருக்கும். பொருளாதாரரீதியாக எடுத்துக் கொண்டால் அதிக அளவில் கடன் வாங்குவீர்கள். மேலும் கடன் சுமை உங்களுக்கு அதிக அளவில் மன அழுத்தத்தினைக் கொடுப்பதாய் இருக்கும்.

சூர்ய பகவான் ஜூலை மாதம் இரண்டாம் பாதியில் கடக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். மேலும் உடன் பிறப்புகளால் குடும்பத்தில் பிளவு ஏற்படும்.

சொத்துப் பிரச்சினைரீதியாக அதிக அளவில் அலைச்சலும், பண விரயமும் இருக்கும். உடல் ஆரோக்கியத்தினைக் கருத்தில் கொண்டால் பெரிய அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படும்.

வீடு சார்ந்த இடமாற்றம் செய்வீர்கள்; குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை வாக்குவாதங்கள், போராட்டங்கள், பிரச்சினைகள் கொண்டதாக இருக்கும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

மாணவர்களைப் பொறுத்தவரை தொலைதூரக் கல்வி கனவானது பல தடைகளுக்கு இடையே நடந்தேறும்.