துலாம் ஜூலை மாத ராசி பலன் 2023!

துலாம் ராசி அன்பர்களே ஜூலை மாதத்தினைப் பொறுத்தவரை செவ்வாய் 11 ஆம் இடத்தில் உள்ளார். சுக்கிரன் மற்றும் செவ்வாய் பகவான் இருவரும் சிம்ம ராசியில் இணைகின்றனர்.

சனி வக்ரமடையும் காலகட்டத்தில் வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை எடுக்கும் புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்; பல ஆண்டுகளாக நீங்கள் அடையக் காத்திருந்த கனவு வேலை நடக்கும் மாதமாக இருக்கும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

2023 ஆம் ஆண்டிலேயே ஜுலை மாதம் துலாம் ராசிக்கு மிகவும் சாதகமான மாதமாக இருக்கும். பொருளாதாரரீதியாக எடுத்துக் கொண்டால் ஏற்றம் நிறைந்த மாதமாக ஜூலை மாதம் இருக்கும்.

ராகு- கேது 1 ஆம் 7 ஆம் இடத்தில் இட அமர்வு செய்துள்ளனர்’ திருமண காரியங்களைப் பொறுத்தவரை சிறு சிறு தடங்கல்கள் இருந்துகொண்டே இருக்கும்.

காதல் திருமணத்தினைப் பொறுத்தவரை பெரிய அளவில் எதிர்ப்புகள் குடும்பத்தில் இருந்துகொண்டே இருக்கும்.

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையே பிரச்சினைகள் ஏற்படும். விட்டுக் கொடுத்தல், பொறுமையுடன் எந்தவொரு விஷயத்தையும் கையாள்தல், நிதானித்துச் செயல்படுதல் போன்ற விஷயங்களைக் கட்டாயம் கடைபிடித்தல் வேண்டும்.

மாணவர்களைப் பொறுத்தவரை மிகவும் சாதகமான காலகட்டமாக ஜூலை மாதம் இருக்கும். எதிர்காலம் குறிந்த எந்தவொரு முடிவினையும் தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் எடுங்கள்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

உடல் ஆரோக்கியத்தினைப் பொறுத்தவரை பெரிய அளவிலான தொந்தவரவுகளில் இருந்து மீள்வீர்கள்.