Kovai Sarala: தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட காமெடி நடிகர்கள் இருந்தாலும் மிகக்குறைந்த அளவில்தான் காமெடி நடிகைகள் இருந்தார்கள். பல ஆண்டுகளாக காமெடி நடிகை என்றால் மனோரமா மட்டுமே இருந்த நிலையில் திறமையான நடிகைகளில் ஒருவராக கோவை சரளா அவருக்கு பின் வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுவயதிலேயே மேடை பேச்சாளராக இருந்த கோவை சரளா, எம்ஜிஆர் முன் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியபோது அவரை வாழ்த்தி கண்டிப்பாக நீ பெரிய ஆளாக வருவாய் என்று ஆசீர்வதித்தார்.
இதனை அடுத்து அவர் பாக்யராஜ் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு என்ற திரைப்படத்தில் நடிகையானார் என்பதும் முதல் படத்திலிருந்து முத்திரையை பதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கவுண்டமணி, செந்தில், எஸ் எஸ் சந்திரன், வடிவேலு என அனைத்து முன்னணி காமெடி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்தார். அவர் ஒரு நாளுக்கு எட்டு கால்ஷிட்டுகளில் நடித்தார் என்றும் கூறப்பட்டது.
அதிகாலை 6:00 மணி முதல் இரவு 12 மணி வரை நடித்ததாகவும் அந்த அளவுக்கு பிஸியாக இருந்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தான் திடீர் திருப்பம் ஆக அவருக்கு பாலு மகேந்திரா இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான சதிலீலாவதி என்ற படத்தில் கமலுக்கு ஜோடியாக நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த படத்தில் நடிக்க கமல்ஹாசன், கோவை சரளாவை பரிந்துரை செய்த போது பாலு மகேந்திரா ஒப்புக்கொள்ளவே இல்லையாம். ஆனால் கமல்ஹாசன் அவரை சமாதானப்படுத்தி இந்த கேரக்டருக்கு கண்டிப்பாக கோவை சரளா பொருத்தமாக இருப்பார் என்றும் இந்த படம் வெளி வந்தால் கோவை சரளாவிற்கு மிகப்பெரிய திருப்புமுனை கிடைக்கும் என்றும் கூறினார்.
பாலமகேந்திராவுக்கு திருப்தி இல்லை என்றாலும் கமல்ஹாசனுக்கு மரியாதை கொடுத்து அதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது கமலஹாசன் சொன்னது சரி என்பது பாலு மகேந்திராவிற்கு புரிய வந்தது.
ஒரு கட்டத்தில் படம் முடிவடைந்து படத்தை போட்டு காட்டிய போது கமல்ஹாசனை விட நடிப்பில் கோவை சரளா அசத்தி இருந்ததை பாலு மகேந்திரா உணர்ந்து 100% கமல்ஹாசனின் சரியான கண்டுபிடிப்பு என்பதை ஒப்புக்கொண்டார்.
உச்சத்தில் இருந்து ஜீரோவான நேபாள ராணி மனிஷா கொய்ராலா.. மது தான் காரணமா?
அதன் பிறகு தான் கோவை சரளாவுக்கு குண சித்திர வேடங்களும் கிடைக்க ஆரம்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்தபோது அவருக்கும் வடிவேலுக்கும் சில பிரச்சனைகள் ஏற்பட்டதாகவும் இனிமேல் தன்னுடைய படத்தில் கோவை சரளா நடிக்க கூடாது என இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரிடம் வடிவேலு நிபந்தனை விதித்ததாகவும் கூறப்பட்டது.
அதன் பிறகு படிப்படியாக கோவை சரளாவுக்கு தமிழ் சினிமாவில் மார்க்கெட் குறைந்து ஒரு கட்டத்தில் காணாமலே போய்விட்டார். இந்த நிலையில் தான் தெலுங்கு திரையுலக வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்த அவர் அவருடைய காமெடி கிளிக்கானதால் தெலுங்கில் முன்னணி காமெடி நடிகையாக மாறினார் என்பதும் தெலுங்கில் அவருக்கு சம்பளமும் அதிகமாக கொடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் ஒதுக்கப்பட்ட கோவை சரளாவை தெலுங்கு சினிமா கொண்டாடியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கோவை சரளா திருமணமே செய்து கொள்ளவில்லை என்பதற்கு ஒரு சில காரணங்கள் கூறப்படுகிறது.
அவருடைய சகோதரர் மற்றும் சகோதரர்களின் குடும்பத்திற்காகவே அவர் திருமணம் செய்யவில்லை என்றும் தான் திருமணம் செய்து கொண்டு புகுந்த வீட்டுக்கு சென்று விட்டால் தங்களுடைய சகோதரர்கள் வாழ்க்கை என்ன ஆகும் என கவலைப்பட்டதால், அவர் திருமணம் குறித்த எண்ணமே இல்லாமல் வாழ்ந்தாகவும் கூறப்பட்டது.
தெலுங்கு திரை உலகில் மாபெரும் நடிகையாக இருந்த கோவை சரளாவை மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்த பெருமை ராகவா லாரன்ஸ்க்கு உண்டு. காஞ்சனா திரைப்படத்தில் அவருக்கு ஒரு நல்ல கேரக்டர் கொடுத்து நடிக்க வைத்தார். அதன் பிறகு அவர் மீண்டும் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். சமீபத்தில் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவான ‘செம்பி’ என்ற படத்தில் கோவை சரளா அபாரமாக நடித்து இருந்தார் என்பதும்குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
