ஒரே நேரத்தில் 2 நடிகைகளுடன் காதல்.. அதில் ஒருவர் தற்கொலை முயற்சி.. கார்த்திக் வாழ்க்கையில் நடந்த திருப்பங்கள்..!

தமிழ் சினிமாவில் நவரச நாயகன் என்ற புகழ் பெற்ற நடிகர் கார்த்திக் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டு புகழின் உச்சிக்கு சென்றார். ஆனால் அவர் நடிகைகளின் காதல் வலையில் சிக்கி அதிலிருந்து மீள முடியாமல் ஒரு கட்டத்தில் தனது மார்க்கெட்டை முழுவதும் இழந்தார். இதனை அடுத்து திருமணம் செய்து கொண்டு தற்போது சினிமாவை விட்டு விலகி இருக்கிறார்.

தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர் ஆன முத்துராமன் மகன் தான் கார்த்திக். இவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது பாரதிராஜாவின் கண்களில் பட்டதால் ’அலைகள் ஓய்வதில்லை’ என்ற படத்தின் நாயகன் ஆக மாறினார். அந்த படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் அவருக்கு வாய்ப்புகள் குவிந்தது.

வடிவேலு செய்த சூழ்ச்சி.. கடைசி வரை திருமணம் செய்யாத கோவை சரளா..கேள்விப்படாத தகவல்கள்..!

ஆனால் அவருக்கு சரியான வழிகாட்டுதல் இல்லாததால்,  சரியான  கதையை தேர்வு செய்ய முடியாததால் தொடர்ச்சியாக தோல்வி படங்களை கொடுத்தார். பிரபலத்தின் வாரிசாக இருந்தாலும் முதல் படம் சூப்பர் ஹிட் கொடுத்தாலும் அவரது அடுத்தடுத்து படங்கள் தொடர்ச்சியாக தோல்வி அடைந்ததால் ஒரு கட்டத்தில் அவரை தமிழ் சினிமா ஒதுக்க தொடங்கியது.

karthik2

இந்த நிலையில் சுதாரித்துக் கொண்ட கார்த்திக், மணிரத்னம் இயக்கிய ’மௌனராகம்’ படத்தில் சிறிய கேரக்டர் என்றாலும் அதில் நடித்தார். அந்த கேரக்டர் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்ததை அடுத்து மீண்டும் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

குறிப்பாக ஆர்வி உதயகுமார் இயக்கத்தில் உருவான ’உரிமை கீதம்’ என்ற திரைப்படம் தான் அவருக்கு திருப்புமுனையை கொடுத்தது. அதன் பிறகு அவர் ஆக்ஷன் படங்களில் நடிக்க தொடங்கினார்.

அதேபோல் ’பொன்னுமணி’ ’பாண்டி நாட்டு தங்கம்’ போன்ற கிராமத்துக் கதைகளில் அவர் நடிக்க தொடங்கினார் என்பதும் கிராமத்து  நாயகன் ஆகவே மாறி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

karthik6

இந்த நிலையில் தான் கார்த்திக் திடீரென நடிகைகளின் காதல் வலையில் விழுந்தார். கமல், ரஜினி ஆகியோர்களின் படங்களில் நடித்த இரண்டு நடிகைகள் கார்த்திக்கை ஒரே நேரத்தில் காதலித்தனர். இந்த காதல் காரணமாக அவர் படப்பிடிப்புக்கு தாமதமாக சென்றதால் அவருக்கு திரையுலகில் கெட்ட பெயர் ஏற்பட்டது.

பின் ஏதோ ஒரு காரணத்தால் இரண்டு நடிகைகள் உடனான காதலும் முறிந்த நிலையில் ’சோலைக்குயில்’ என்ற படத்தில் தன்னுடன் நாயகி ஆக நடித்த ராகினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து அவரது தங்கையையும் திருமணம் செய்து கொண்டது தான் அனைவருக்கும் புரியாத புதிராக இருந்தது. கார்த்திக் – ராகினி திருமணம் குறித்த விஷயத்தை கேள்விப்பட்ட அவரை தீவிரமாக காதலித்த நடிகை ஒருவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்பட்டது.

உச்சத்தில் இருந்து ஜீரோவான நேபாள ராணி மனிஷா கொய்ராலா.. மது தான் காரணமா?

திருமணத்திற்கு பின்னர் படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்ட கார்த்திக் அதன் பிறகு பட வாய்ப்பையும் எதிர்பார்க்கவில்லை. இந்த நிலையில் தான் மணிரத்னம் இயக்கிய ’ராவணன்’ என்ற திரைப்படத்தில் மீண்டும் ரீ என்ட்ரி ஆனார். ஆனால் அந்த படத்தில் அவருக்கு பெரிய ஸ்கோப் கிடைக்கவில்லை. அதன் பிறகு ’அனேகன்’, ’தானா சேர்ந்த கூட்டம்’ உட்பட ஒரு சில படங்களில் நடித்தாலும் பெரிய அளவில் அவரது நடிப்பு பேசப்படவில்லை.

கார்த்திக்கிற்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருந்ததற்கு காரணம் அவரது சமுதாயம் தான். அவரது சமுதாயத்தினர் அவர் மீது வெறித்தனமாக அன்பு செலுத்தினர் என்பதும் அவர் வந்தால் தான் திருமணம் செய்வேன் என்று வெறித்தனமாக இருந்த ரசிகர்கள் எல்லாம் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் தனது சமுதாயத்தை நம்பி அவர் அரசியலில் குதித்தார். ஆனால் அரசியலில் ஜோக்கராக அவர் மாறியதை அடுத்து தற்போது சினிமா, அரசியல் இரண்டிலும் இருந்து விலகி தனது மகனை சினிமாவில் பெரிய ஆளாக மாற்றுவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...