இந்தியாவில் அறிமுகமாகும் Motorola Razr 40 Ultra.. சிறப்பம்சங்கள் இவ்வளவா?

Published:

மொபைல் போன் உற்பத்தியில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மோட்டோரோலா அவ்வப்போது தனது புதிய மாடல்களை வாடிக்கையாளர்களுக்காக அறிமுகம் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். மோட்டோரோலா அறிமுகம் செய்த அனைத்து மாடல்களுமே கிட்டத்தட்ட வெற்றி பெற்றுள்ளது என்பதும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இந்த ஆண்டு ஜூலை 3ஆம் தேதி மோட்டரோலா நிறுவனம் வெளியிட இருக்கும் புதிய ஸ்மார்ட் போன் மாடல் Motorola Razr 40 Ultra. இந்த மாடல் குறித்த விலை மற்றும் கூடுதல் விவரங்களை தற்போது பார்ப்போம்.

Motorola Razr 40 Ultra ஆனது ஜூலை 3ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 8GB RAM/256GB ஸ்டோரேஜ் இருக்கும் என்றும் இதன் விலை சுமார் ரூ.66,090 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் Viva Magenta, Infinite Black மற்றும் Glacier Blue ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும்.

Motorola Razr 40 Ultra ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் இதோ:

* 1080 x 2640 தெளிவுத்திறன் கொண்ட 6.9-இன்ச் டிஸ்ப்ளே

* ஸ்னாப்டிராகன் 8+ ஜெனரல் 1 பிராஸசர்
* 8 ஜிபி ரேம்
* 256 ஜிபி ஸ்டோரேஜ்
* 2MP பிரதான கேமரா + 13MP அல்ட்ராவைடு கேமரா
* 32 எம்.பி செல்பி கேமிரா
* 3800mAh பேட்டரி
* ஆண்ட்ராய்டு 13 ஆப்பரேட்டிங் சிஸ்டம்

Motorola Razr 40 Ultra ஸ்மார்ட்போனின் சில நிறை, குறைகளை பார்ப்போம்.

நிறைகள்

* சக்தி வாய்ந்த பிராஸசர்
* பெரிய டிஸ்ப்ளே
* நல்ல கேமரா அமைப்பு
* ஸ்டைலான வடிவமைப்பு

குறைகள்

* விலை உயர்ந்தது
* வேறு சில மடிக்கக்கூடிய போன்களைப் போல நீடித்து நிலைக்காது
* பேட்டரி ஆயுள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.

மேலும் உங்களுக்காக...