தனித்தன்மையுடன் வெளியாகும் சாம்சங் கேலக்ஸி வாட்ச் 6: என்னென்ன சிறப்பம்சங்கள்?

By Bala Siva

Published:

செல்போன் பயன்பாடு வந்த பிறகு கையில் கட்டும் வாட்சுகள் விற்பனை படு வீழ்ச்சி அடைந்தது. ஆனால் அதற்கு பதிலாக தற்போது ஸ்மார்ட் வாட்ச் விற்பனை அதிகரித்து வருகிறது என்பதும் பல முன்னணி நிறுவனங்கள் ஸ்மார்ட் வாட்ச் உற்பத்தியில் தீவிரம் காட்டி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சாம்சங் நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் கேலக்ஸி வாட்ச் 6 சீரியஸ் வாட்சில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன என்பதை தற்போது பார்ப்போம்.

SamMobile இன் அறிக்கையின்படி, வரவிருக்கும் சாம்சங் கேலக்ஸி வாட்ச் 6 சீரிஸ் புதிய Exynos W980 SoC மூலம் இயக்கப்படும் என்ற தகவல் இந்த வாட்ச் தனித்தன்மையுடையது என்பது தெரிய வருகிறது. இந்த சிப் கேலக்ஸி வாட்ச் 5 மற்றும் கேலக்ஸி வாட்ச் 4 சீரிஸில் இயங்கும் Exynos W920 SoC ஐ விட 10% வேகமாகவும் சக்தி வாய்ந்ததாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி வாட்ச் 6 வாட்சில் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் சில முக்கிய அம்சங்கள் இதோ:

* Exynos W980 SoC
* 5nm செயல்முறை
* Exynos W920 ஐ விட 10% வேகமானது
* மேம்படுத்தப்பட்ட பேட்டரி ஆயுள்
* பெரிய 300mAh பேட்டரி (40mm மாடல்)
* 425mAh பேட்டரி (44mm மாடல்)

சாம்சங் கேலக்ஸி வாட்ச் 6 குறித்த தகவல் தற்போது கசிந்துள்ள நிலையில் இந்த வாட்சின் பிராஸசர் மற்றும் பேட்டரி சிறப்பாக இருக்கும் என நம்பிக்கையை அளிக்கின்றன. இந்த ஆண்டின் பிற்பகுதியில் சாம்சங் நிறுவனம் இந்த வாட்சின் சிறப்பங்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது.