29 வயது இளம்பெண்ணின் உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்.. நூலிழையில் உயிர்தப்பிய அதிசயம்..!

Published:

ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்துபவர்கள் அவ்வப்போது தங்கள் இதய துடிப்பை அறிந்து கொள்ள முடியும் என்பதும் இதயத்துடிப்பு ஆபத்தான நிலையில் இருந்தால் உடனடியாக சுதாரித்துக் கொண்டு மருத்துவமனை சென்று தங்கள் உயிரை காப்பாற்றிக்கொண்டனர் என்ற செய்தியை அடிக்கடி பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த 29 வயது இளம்பெண் ஒருவரின் நுரையீரல் செல்லும் வழியில் ரத்தம் உறைந்து இருந்ததாகவும் இதனை அடுத்து அவரது இதயத்துடிப்பு அதிகரித்ததை எடுத்து அவர் உடனடியாக ஆப்பிள் வாட்ச் மூலம் அதை தெரிந்து கொண்டு மருத்துவமனையை சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டதால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்காவில் உள்ள ஒகியோ என்ற பகுதியை சேர்ந்த 29 வயது பெண் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென அவரது இதயத்துடிப்பு 178 என ஆப்பிள் வாட்ச் எச்சரித்தது. இதனை அடுத்து அவர் உடனடியாக மருத்துவமனை சென்றபோது அங்கு அவருக்கு நுரையீரலுக்கு செல்லும் வழியில் ரத்தம் ஓட்டத்தை தடுக்கும் அளவுக்கு ரத்தம் உறைந்திருந்தது என்றும் அவருடைய ஆப்பிள் வாட்ச் அதை எச்சரிக்காவிட்டால் அவர் சில மணி நேரத்தில் இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்து ரத்த உறைவு நீக்கப்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் உயிர் தப்பியதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆப்பிள் வாட்ச் ஒரு உயிரைக் காப்பாற்றுவது இது முதல் முறை அல்ல. 2018 ஆம் ஆண்டில், ஆப்பிள் வாட்ச் ஒரு இளைஞருக்கு மாரடைப்பு ஏற்படுவதை எச்சரித்தது. அதேபோல் 2019 ஆம் ஆண்டில், ஆப்பிள் வாட்ச் ஒரு பெண்ணை அவருடைய இதயத்துடிப்பு குறித்து எச்சரித்தது.

உங்களிடம் ஆப்பிள் வாட்ச் இருந்தால், உங்கள் இதயத் துடிப்பைக் கண்காணிக்க இதய துடிப்பு சென்சார் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது சில இதய சிக்கல்களைக் கண்டறிந்து உங்களுக்குத் தேவையான மருத்துவ கவனிப்பைப் பெற உதவும்.

மேலும் உங்களுக்காக...