AI என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இயக்கப்பட்ட ட்ரோன் மனித உயிர்களை பலி வாங்கி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் AI தொழில்நுட்பத்தால் ராணுவத்தின் ட்ரோன் ஒன்று இயக்கப்பட்டதாகவும் அதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக AI ட்ரோனை இயக்கிய ஆபரேட்டர் பலியானதாகவும் கூறப்படுகிறது.
AI தொழில் நுட்பம் என்பது தற்போது பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் ட்ரோன் ஆபரேட் செய்யவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்கா ராணுவத்தில் AI தொழில்நுட்பத்தால் ட்ரோன் ஒன்றை வான்வழி ஏவுகணை தாக்குதலை குறிவைத்து தாக்கும் பணியை மேற்கொள்ளப்பட்டது. இதில் AI தொழில்நுட்பம் மிகச் சரியாக இலக்கை அடையாளம் கண்டாலும் திடீரென அது அந்த ட்ரோனை இயக்கிய மனித ஆபரேட்டர் உயிரிழந்தார்
இந்த சம்பவம் குறித்து அமெரிக்க ராணுவம் எந்தவித விவரங்களையும் வெளியிடவில்லை என்றும் ஆனால் தனியார் நிறுவனத்தின் அறிக்கை ஒன்றில் இடம்பெற்றுள்ளது அடுத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை அடுத்து AI தொழில்நுட்பத்தால் ட்ரோன்கள் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது. AI தொழில் நுட்பத்தால் இயக்கப்படும் ட்ரோன்கள் திட்டமிட்டபடி செய்தாலும் மனித ஆபரேட்டர்களையும் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.