ஒரே ஒரு ரன் மட்டும் அடித்து ரன் அவுட் ஆன பத்திரானா .. பந்து வீச்சில் கலக்குவாரா?

Published:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி பந்துவீச்சாளர்களில் ஒருவரான பத்திரானா தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறார். அவர் இன்று அதிசயமாக பேட்டிங் செய்த நிலையில் ஒரே ஒரு ரன் அடித்த நிலையில் ரன் அவுட் ஆனது துரசிஷ்டவசமாக கருதப்படுகிறது.

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.

அந்த அணியின் அஸ்லாங்கா மிக அபாரமாக விளையாடி 91 ரன்கள் எடுத்தார். அதேபோல் டிசில்வா 51 ரன்களும், நிசாங்கா 38 ரன்கள் அடித்தனர். இறுதியில் இலங்கை அணி 50 ஓவர்களில் 268 ரன்கள் ஆட்டம் இழந்தது. இந்த போட்டியில் சிஎஸ்கே வீரர் பத்திரானா கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார்.

இந்த நிலையில் 269 என்ற இலக்கை நோக்கி தற்போது ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க ஆட்டக்காரரான இப்ராஹிம் அபாரமாக விளையாடி 98 ரன்கள் அடித்துள்ளார். சற்றுமுன் வரை ஆப்கானிஸ்தான் அணி 33 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 16 ஓவர்களில் அந்த அணி 80 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி எது என்பதை பார்ப்போம்.

பத்திரானா இதுவரை 6 ஓவர்கள் வீசி 48 ரன்கள் கொடுத்து விக்கெட் எதையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் உங்களுக்காக...