நீங்க குடிக்கும் பால் சுத்தமானதா? கலப்படமானதா? கண்டறிய வழிமுறைகள்..!

Published:

பால் உடல் ஆரோக்கியத்துக்கு வேண்டிய அனைத்து நன்மைகளையும் அள்ளித் தரக்கூடியது. ஆனால் உணவு கலப்படங்கள் அதிகரித்துவிட்ட நிலையில் பால் கலப்படமும் தற்போழுது நடந்து வருகிறது.

பாலின் நற்குணங்கள் முழுமையாக உடலுக்கு கிடைக்கும் என்றுதான் பலரும் நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் யாரும் நேரடியாக பசுமாடுகள் இருக்கும் இடத்துக்கு சென்று பால் வாங்கி பயன்படுத்துவதில்லை.

பெரும்பாலும் பால் பாக்கெட் அல்லது வீடு தேடி வரும் பசுமாட்டு பால் தான் வாங்கி பயன்படுத்துகிறோம். இவை கலப்படமானவையா அல்லது தூய்மையானவையா என கண்டறிய எளிய வழிமுறைகள் உள்ளது.

தாயே இழந்து தவிக்கும் குழந்தைக்கும் பவுடர் பால் அப்போது கிடையாது. இந்த பசும்பால்தான் உதவியது. ஆரோக்கியம் குன்றியவர்களுக்கு மூன்று வேலையும் பசியை ஈடு செய்ய பால் கொடுக்கப்பட்டது. காலமாற்றத்தில் பாலில் தண்ணீர் கலந்த விற்பனை செய்தார்கள். அதனால் தண்ணீர் கலந்த பாலும் தூய்மையான பாலாகவே இருந்தது.

பாலில் இருந்து கிடைக்கும் மோர், தயிர், வெண்ணெய் போன்ற பொருட்களும் உடலுக்கு சத்து கூட்டக்கூடிய பொருளாகவே இருக்கிறது. தூய்மையான கரந்த பாலில் தண்ணீர் கலந்து விற்பனை செய்த போதும் அதன் பரிசுத்தமும் சத்தும் மாறவில்லை. ஆனால் பாலை பாக்கெட்டில் அடைத்த விற்பனை செய்தபோது ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் மட்டுமே பால் இருக்கிறது.இதில் அதிக அளவு கெமிக்கல் நிறைந்திருக்கிறது.

பாக்கெட்டில் பாலில் செயற்கையாக புரோட்டின், கொழுப்பு சேர்க்கப்படுவதாக கூறுகிறார்கள். பதப்படுத்தும் போது அதிக கொதி நிலையில் புரோட்டின் அளவு மாறுகிறது. இன்று பால் நீண்ட நாட்களாக பயன்படுத்த வேண்டியதால் அவை கெடாமல் இருக்க ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. இவை குடலுக்கு பாதிப்பை உண்டாக்குகின்றனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது.

தினமும் குடிக்கும் பால் சத்து பாலா அல்லது நச்சு பாலா என்பதை தெரிந்து கொள்ள எளிய பரிசோதனைகளை வீட்டிலேயே செய்யலாம்.

பாலில் லெக்ட்டோ மீட்டர் மூலம் அந்த பாலில் அதிகப்படியான தண்ணீர் கலப்படம் இருப்பதை உறுதி செய்யலாம்.

காய்ச்சிய பாலை கண்ணாடி குடுவையில் ஊற்றி நன்றாக குலுக்கினால் சோப்பு தூள் கலந்த பாலாக இருந்தால் பொங்கிநுரை நீண்ட நேரம் இருக்கும். கண்ணாடி குடுவை அல்லது கைகளில் சிறிது ஊற்றி தேய்த்தாலும் நுரை பொங்கி வர செய்யும்.

சுத்தமான தரையில் ஒரு டீஸ்பூன் பாலை விட்டால் அந்த பால் அப்படியே இருக்கும். மாவு கலப்படம் இருந்தால் பால் ஓடி மாவு தரையில் தங்கும்.

சுத்தமான பாலை காய்ச்சும் போது எலுமிச்சை சாறு சேர்த்தால் அவை திரிந்து விடும். கலப்பட பாலாக இருந்தால் திரியாது. ஒரு கிண்ணத்தில் பாலை விட்டு உப்பு தூவியதும் அவற்றின் நீல நிற வட்டங்கள் உருவானால் அது மாவு கலப்படம் நிறைந்த பால் என்பதை உறுதி செய்யலாம்.

தலை முடியைவிட மெல்லிய ரோபோக்கள்..! அதிர்ச்சி தகவல்கள்

இவை தவிர அருகில் இருக்கும் அரசு சார்ந்த பால் பரிசோதனை நிலையங்களிலும் பரிசோதனை கூடங்களிலும் கூட கொடுத்து பரிசோதிக்கலாம்.

 

மேலும் உங்களுக்காக...