உலகில் எந்த அளவுக்கு டெக்னாலஜி உயர்கிறதோ அந்த அளவுக்கு ஆபத்துகளும் அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக புதுசு புதுசாக வைரஸ்கள் தோன்றி நமது தனிப்பட்ட டேட்டாக்கள் என்பது பாதுகாப்பு இன்றி இருக்கும் நிலை ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஆண்ட்ராய்டு போன்களில் பரவி வரும் புதிய மால்வேர்தான் டாம் வைரஸ். இது அழைப்புகள், கால் ஹிஸ்ட்ரி, கேமராக்களின் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை திருடலாம் என்றும், இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
டாம் வைரஸ் தீங்கிழைக்கும் ஒரு வைரஸ் என்றும், இந்த வைரஸ் ஃபிஷ்ஷிங் இணைப்புகள் மூலம் உங்கள் தொலைபேசியில் நிறுவப்படலாம் என்றும், இது நிறுவப்பட்டதும், அது உங்கள் கால்கள், கால் ஹிஸ்ட்ரிகள் திருடப்படலாம் என்றும், உங்கள் கேமராவை கட்டுப்படுத்தி அனைத்து டேட்டாகளையும் திருடலாம் என்றும் தெரிகிறது.
அதுமட்டுமின்றி இந்த வைரஸ் உங்கள் சாதனத்தின் பாஸ்வேர்டை மாற்றும், உங்களுக்கே தெரியாமல் ஸ்கிரீன்ஷாட்களை எடுக்கும், எஸ்எம்எஸ்களைத் திருடும், டேட்டாக்களை டவுன்லோடு செய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டாம் வைரஸிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள, நீங்கள் செய்ய வேண்டியது:
* கூகுள் ப்ளே ஸ்டோர் போன்ற நம்பகமான தளங்களில் இருந்து மட்டுமே செயலிகளை டவுன்லோடு செய்யவும்.
* மின்னஞ்சல்கள் அல்லது குறுஞ்செய்திகளில் உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்வதில் கவனமாக இருங்கள்.
* உங்கள் போனின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் ஆப்ஸை புதுப்பித்த நிலையில் வைத்திருங்கள்.
* தீம்பொருளுக்காக உங்கள் தொலைபேசியை ஸ்கேன் செய்ய பாதுகாப்பு பயன்பாட்டைப் பயன்படுத்தவும்.
* சந்தேகத்திற்கிடமான பயன்பாடுகளை உடனடியாக நிறுவல் நீக்கவும்.
* உங்கள் சாதன பாஸ்வேர்டுகளை அவ்வப்போது மாற்றவும்.
* உங்கள் கூகுள் கணக்கிற்கு இரு காரணி அங்கீகாரத்தை இயக்கவும்.
* பொது வைஃபை நெட்வொர்க்குகளுடன் இணைக்கும்போது VPN ஐப் பயன்படுத்தவும்.
* ஆன்லைனில் எந்த தகவலைப் பகிர்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள்.
மேலும் இதுகுறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால், உங்கள் தொலைபேசியின் உற்பத்தியாளரை அல்லது பாதுகாப்பு நிபுணரைத் தொடர்புகொள்ளவும்.
மேற்கண்ட உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம், பாதுகாப்பு அச்சுறுத்தல்களிலிருந்து உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலைப் பாதுகாக்க உதவலாம்.