மூளைக்குள் சிப் வைக்கும் எலான் மஸ்க் திட்டம்.. FDA ஒப்புதல்..!

Published:

மனித மூளைக்குள் சிப் வைக்கும் எலான் மஸ்க் திட்டத்திற்கு அமெரிக்கா அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

மனிதமூளையை கம்ப்யூட்டர் மூலம் ஆய்வு செய்ய எலான் மஸ்க் நியூரா லிங்க் என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனத்திற்கு தற்போது அமெரிக்க அரசு, மனித மூளைக்குள் சிப் வைக்க அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் நரம்பியல் தொடர்பான எந்த நோயாக இருந்தாலும் மூளைக்குள் சிப் வைப்பதன் மூலம் அதை சரி செய்து விடலாம் என்றும் மூளை சம்பந்தமான எந்தவிதமான நோயாக இருந்தாலும் அதை குணப்படுத்தலாம் என்று கூறப்பட்டது.

குறிப்பாக எலான் மஸ்க் அவர்களின் நியூராலிங் நிறுவனம் நரம்பியல் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களுக்காக இந்த ஆய்வு மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டது. பக்கவாதம், பார்வை குறைபாடு உள்ளிட்டவர்களுக்கு மூளையில் சிப் வைப்பதன் மூலம் மிக எளிதில் அவர்களை குணப்படுத்த விடலாம் என்றும் கூறப்பட்டது.

elon musk1மூளைக்குள் வைக்கப்படும் சீட் கம்ப்யூட்டர் மூலம் கமாண்டுகளாக மாற்றம் செய்து எளிதில் குணப்படுத்த விடலாம் என்றும் ஆராய்ச்சி முடிவு கூறியது. கடந்த 2018 ஆம் ஆண்டு விலங்குகள் மூளையில் இந்த சிப் வைத்து பரிசோதனை செய்யப்பட்டது. குறிப்பாக குரங்குகளின் மூலையில் வைக்கப்பட்ட சிப் நன்றாக வேலை செய்வது உறுதி செய்யப்பட்டது.

இது தொடர்பான ஆய்வு அறிக்கைகளை நியூராலிங்க் நிறுவனம் அமெரிக்க அரசிடம் சமர்ப்பித்த நிலையில் தற்போது மனித மூளையில் சிப் வைத்து ஆய்வு செய்வதற்கான அனுமதியையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மருத்துவ உலகில் ஒரு மிகப்பெரிய புரட்சி ஏற்படும் என்றும் பக்கவாதம் போன்ற நோய்களை எளிதில் குணப்படுத்தி விடலாம் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே தொழில்நுட்பம் விண்வெளி உள்ளிட்ட துறைகளில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள எலான் மஸ்க் தற்போது மூளைக்குள் சிப் வைக்கும் தொழில்நுட்பத்தில் வெற்றி பெற்றால் உலகமே அவரை பாராட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...