தங்கம் மற்றும் வெள்ளி கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தங்கம் என்று மீண்டும் உயர்ந்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னால் தங்கம் விலை மிக அதிகமாக உயர்ந்தது என்பதும் ஒரு சவரன் தங்கம் 46 ஆயிரம் வரை விற்பனையானது என்பதையும் பார்த்தோம். ஆனால் அதன் பின் தங்கம் விலை ஓரளவு குறைந்ததை அடுத்து தற்போது மீண்டும் தங்கம் விலை உயர்ந்து 46 ஆயிரத்து நெருங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 18 ரூபாய் உயர்ந்து 5710 என்ன விற்பனை ஆகி வருகிறது. அதேபோல் ஒரு சவரனுக்கு 104 ரூபாய் உயர்ந்து 45 ஆயிரத்து 680 என விற்பனை ஆகி வருகிறது.
24 கேரட் சுத்த தங்கம் ஒரு கிராம் 6180 என்றும் ஒரு சவரன் 49,440 என்றும் விற்பனை ஆகி வருகிறது. வெள்ளியை பொறுத்தவரை ஒரு கிலோ 82 ஆயிரத்து 700 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கம் விலை ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டே இருப்பது சாமானிய மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும். ஆனால் அதே நேரத்தில் தங்கத்தின் முதலீடு செய்பவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கம் விலை குறையும்போது அதை வாங்குவதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு தங்கம் வாங்கி சேமிக்க வேண்டும் என்றும் நீண்ட கால சேமிப்புக்கு தங்கம் சிறந்த சேமிப்பாக கருதப்படுகிறது.