படப்பிடிப்பே தொடங்கல…. அதுக்குள்ள ரிலீஸ் தேதி லாக் செய்த அஜித்தின் விடா முயற்சி!

Published:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார் துணிவு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு விடாமுயற்சி படத்தில் நடிக்க உள்ளார், இந்த படத்தை மகிழ்வி திருமேனி இயக்குகிறார்.

மேலும் இப்படத்தின் டைட்டில் அவரது பிறந்த நாள் மே 1 அன்று அதிகாலை 12 மணிக்கு லைகா நிறுவனம் படத்தின் டைட்டில் போஸ்டரை வெளியிட்டுள்ள நிலையில் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அஜீத் நடிப்பில் உருவாகும் 62 வது திரைப்படமான ’விடாமுயற்சி’ படத்தில் அனிருத் இசையமைக்க நீரவ் ஷா ஒளிப்பதிவில் உருவாக உள்ளது இந்த படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளத்தாகவும் கூறப்படுகிறது.

அஜீத் தற்போது தனது பைக் சுற்றுப்பயணங்களில் இருக்கும் நிலையில் அதை முடித்து சென்னை திரும்பியதும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல் கிடைத்துள்ளது

இந்த நிலையில் தற்போது படம் குறித்து அடுத்த அப்டேட்டை பட குழு வெளியிட்டு இருக்கிறது அதில் மொத்த படத்தையும் 70 நாட்களில் முடிக்க இயக்குனர் மகிழ்திருமேனி திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது

இந்த படத்தின் படப்படிப்பானது மே மாத இறுதியில் தொடங்கப்பட இருக்கிறது நடிகர் அஜித்குமார் ஜூன் மாதம் முதல் வாரத்தில் பல படிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் இந்த படத்திற்காக 40 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது .

கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு 110 வகையான மூலிகைகள் வெளியீடு !

இதனால் விடாமுயற்சி படத்தினை செப்டம்பர் மாத இறுதியில் வெளியிடப்பட குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது

படத்தின் பூஜை நாள் அறிவிக்கும் முன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்துள்ளது அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி ஆழ்த்தியுள்ளது.

மேலும் உங்களுக்காக...