நமது உடலின் ஆரோக்கியத்திற்கும் சிறுநீரகத்திற்கும் அதிக தொடர்பு உண்டு. ரத்தத்திலிருந்து கழிவுகளை பிரித்து சிறுநீர் மூலம் வெளியேற்றுவதே சிறுநீரகத்தின் வேலையாகும் உடலுக்கு தேவையான குளுக்கோஸ் அமினோ அமிலம் விட்டமின்கள் ஹார்மோன்கள் போன்றவற்றை தேக்கி வைத்துக் கொண்டு தேவையற்ற யூரியா குளோரைடு போன்ற கழிவு பொருட்களை பிரித்தெடுத்து வெளியேற்ற முக்கியமான பணியை சிறுநீரகம் செய்கிறது.
ஆனால் தற்போது நாம் பல வகையான உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட பானங்களை குடிப்பதால் பல வகையான அழுக்குகள் மற்றும் நச்சுக்கள் உடலில் சேரும், இதனால் சிறுநீரகத்திற்கு இடையே சிறுநீரக கற்கள் உருவாகலாம்.
சிறுநீரகத்தை இயற்கையாகவே சுத்தம் செய்வதுடன் சிறுநீரகத்தின் திறனை அதிகரிக்க செய்யும் உணவுகளை பற்றி அறிந்து கொள்வோம்
எலுமிச்சை
எலுமிச்சையில் பலவிதமான சத்துக்கள் இருக்கிறது. எனவே இதன் சாறு சிறுநீரகத்தை சுத்தம் செய்வதில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது எலுமிச்சையை ஜூஸ் போட்டு குடிப்பதால் சிறுநீரில் உடல் நச்சுகள் வெளியேற்றப்படும் சிறுநீரக கற்கள் வருவதற்கான ஆபத்து குறையும்
எலுமிச்சை சாறு ரத்தத்தை வடிகட்டுகிறது மற்றும் நச்சுக்களை நீக்குகிறது
துளசி
துளசி சிறுநீரக கற்களை நீக்குகிறது ரத்தத்தில் உள்ள யூரிக் அமில அளவையும் குறைக்கிறது சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. துளசியில் உள்ள அத்தியாவசிய எண்ணெய் மற்றும் ஆசிட்டிக் அமிலம் சிறுநீரக கற்களை உடைக்கும்
மாதுளை
சிறுநீரகம் தொடர்பான எல்லா பிரச்சினைகளுக்கும் விடுபட மாதுளை சாற்றை பயன்படுத்தலாம். மாதுளை சாற்றில் ஆன்டி ஆக்ஸிடர்கள் காணப்படுகின்றன இது சிறுநீரில் அமில அளவை குறைக்கிறது இதனுடன் சிறுநீரக கற்கள் வளராமல் தடுக்கிறது மாதுளை சாறு குடிப்பதால் சிறுநீரக கல் வழியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்
பேரிச்சம் பழம்
பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து ஏளமாக உள்ளது இது கற்களின் அபாயத்தை குறைக்க உதவுகிறது பேரிச்சம் பழத்தை இரவில் தண்ணீரில் ஊற வைக்கவும் இதனை காலையில் சாப்பிட வேண்டும் இதனால் சிறுநீரக கற்கள் வெளியேற்றப்படும் இதனை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
பலா கொட்டையில் இருக்கும் பிரமிக்க வைக்கும் பயன்கள்!
தேங்காய்
தேங்காயில் வைட்டமின் பி நார்ச்சத்து மற்றும் பல தாதுக்கள் ஏராளமாக காணப்படுகின்றன எனவே இவை அனைத்தும் சிறுநீரகத்தை இயற்கையான முறையில் சுத்தம் செய்கிறது