பலா கொட்டையில் இருக்கும் பிரமிக்க வைக்கும் பயன்கள்!

தமிழ்நாட்டில் வெயில் அனைவரையும் வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். வெயிலுக்கு ஜூஸ், மோர், இளநீர் போன்றவற்றை மக்கள் அதிகமாக பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.

அதே போல வெயில் காலத்தில் மாம்பழம் தர்பூசணி மற்றும் பலாப்பழம் போன்ற பழங்களின் விற்பனை அதிகமாக இருக்கும். அதிலும் பலாப்பழத்தின் சுவையை பிடிக்காதவர்கள் இருக்க முடியாது.

ஆனால் பலா பழத்தின் பலாக்கொட்டைகளை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை மிக குறைவு குறைவாகவே உள்ளது. பலாக்கொட்டையில் உள்ள மருத்துவ பயன்களை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பலா கொட்டைகளை பொரியல் போன்று சமைத்து சாப்பிடலாம் அதுவும் உடலுக்கு மிகவும் நல்லது.

மேலும் இதை சாப்பிட்டு வந்தால் வயதான பிறகு தோள்களில் ஏற்படும் சுருக்கங்களை குறைக்க பலா கொட்டையில் உள்ள சத்துக்கள் மிகவும் உதவுகிறது.

பலா கொட்டையை அரைத்து நன்கு பொடியாக மாற்றிய பின்னர் பால் மற்றும் தேனுடன் கலந்து முகத்துக்கு உபயோகித்தால் முகப்பொலிவு அதிகரிக்கும்.

பலா கொட்டையில் உள்ள விட்டமின், புரத சத்துக்கள் பல சரும நோய்களை சரி செய்கிறது. மேலும் இதில் உள்ள சத்துக்கள் தலைமுடியின் அடர்த்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

பலா கொட்டையில் உள்ள சத்துக்கள் ஹீமோகுளோபின் போன்றவற்றை சீராக்கி ரத்த சோகை போன்ற நோய்களை வரவிடாமல் தடுக்கிறது.

விட்டமின் ஏ அதிகமுள்ள பலாக்கொட்டை கண் பார்வையை தெளிவாக வைப்பதோடு மாலை கண் நோயை குணமாக்கவும் உதவுகிறது. பலாக்கொட்டைகளின் பொடியை தண்ணீரில் கலந்து குடிப்பது செரிமான சிக்கல்களுக்கு தீர்வாக அமைகிறது.

நாம் இனியாவது பலாகொட்டைகளை வீணாக்காமல் உணவில் சேர்த்து பயன்பெறலாம் .

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.