ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் தெண்டுல்கர் தனது முதல் விக்கெட்டை எடுத்து உள்ளதை அடுத்து அவருக்கு சச்சின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மும்பை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 192 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹைதராபாத் அணி 178 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் மும்பை புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தை பெற்றது என்பதும் ஹைதராபாத் அணி ஒன்பதாவது இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்றைய போட்டியில் கடைசி ஓவரில் 20 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஐதராபாத் அணி இருந்த நிலையில் 20வது ஓவரை அர்ஜுன் தெண்டுல்கர் வீச வந்தார். அந்த ஓவரில் அவர் பெரும் நான்கு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஐந்தாவது பந்தில் ஒரு விக்கெட்டையும் எடுத்தார். இதனை அடுத்து ஐபிஎல் தொடரில் தனது முதல் விக்கெட்டை அர்ஜுன் தெண்டுல்கர் எடுத்துள்ளதை அடுத்து அவருக்கு சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பிரபலங்கள் பாராட்டு தெரிவித்தார்.
கடந்த 16ஆம் தேதி நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் அர்ஜுன் தெண்டுல்கர் களமிறங்கிய போதிலும் அவர் ரெண்டு ஓவரில் 17 ரன்கள் கொடுத்து விக்கெட் எடுக்கவில்லை ஆனால் நேற்றைய போட்டியில் அவர் தனது முதல் விக்கெட்டை எடுத்து உள்ளதை அடுத்து இனி அடுத்தடுத்து போட்டிகளில் விக்கெட்டுகளை வீழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அர்ஜுன் தெண்டுல்கர் பவுலர் மட்டுமின்றி பேட்டிங்கும் நன்றாக செய்வார் என்றாலும் அவருக்கு இன்னும் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சச்சின் டெண்டுல்கர் தனது மகனை ஐபிஎல் தொடரில் ஒரு நல்ல வீரராக்கி, அதன் பிறகு இந்திய அணியிலும் அவரை நுழைக்க வேண்டும் என்பதுதான் அவரது ஆசையாக உள்ளது என்றும் அவரது ஆசை விரைவில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனது தந்தை கிரிக்கெட்டில் ஒரு மிகப்பெரிய ஜாம்பவானாக இருந்தாலும் அவருடைய மகன் ஐபிஎல் போட்டியில் நுழைவதற்கு திணறினார் என்பதும் தற்போது தான் அவர் கொஞ்சம் கொஞ்சமாக தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.