தீர்க்க சுமங்கலியாக இருக்க அவசியம் இந்த விரதத்தைக் கடைபிடிங்க…! எமனையே தடுத்து நிறுத்திய சத்தியவதி!

By Sankar Velu

Published:

ஒரு குடும்பம் மகிழ்ச்சிகரமாக இருக்க வேண்டும் என்றால் அங்கு முதலில் கணவன், மனைவி ஒற்றுமை இருக்க வேண்டும். அடுத்தது அவர்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். குழந்தைகளும் நோய் நொடியில்லாமல் நல்ல படியாக படித்து வளர வேண்டும். இதைத்தான் அனைவரும் விரும்புவர். அதற்குத் தான் வருகிறது காரடையான் நோன்பு.

சாவித்ரி விரதம், கௌரி விரதம் என்று வேறு பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது.

சாவித்திரி, சத்தியவான் இவர்களைத் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. சத்தியவானுக்கு ஏற்பட்ட மரணகண்டத்தில் இருந்து அவர் விடுதலையாகி நீண்ட ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் என்று சாவித்திரி கௌரி மாதாவாகிய பராசக்தியை வேண்டி வழிபாடு செய்கிறாள். அப்போது அவங்க காட்டுல இருக்கிறாங்க.

Karadaiyan Nonbu
Karadaiyan Nonbu

அங்கு கிடைக்கும் எளிமையான பொருள்களோடு மகாசக்தியாகிய அந்த பராசக்தியை உள்ளன்போடு பிரார்த்தனை செய்கிறாள். அந்த வேளையில் எமன் உயிரை எடுக்கும் நாள் வருகிறது. அப்போது சத்தியவதியாகிய இருக்கின்ற சாவித்திரியின் கண்களுக்கு எமன் வருவது தென்பட்டு விட்டது. அவரது கணவனின் உயிரை எடுத்துச் செல்கிறபோது எமனைத் தடுத்து நிறுத்துகிறாள்.

எமனையேத் தடுத்து நிறுத்துகிறாள் என்றால் எவ்வளவு வலிமை உடைய பெண் என்று பார்த்துக்கொள்ளுங்கள். எல்லாம் அந்த பராசக்தியைப் பூஜித்த பலன் தான். சத்தியத்தின் திறன். எமனையேத் தடுத்து நிறுத்தி என் கணவரை என்னோடு ஒப்படைக்க வேண்டும் என்று கேட்கிறாள். எமனோ எனக்குக் கொடுக்க உரிமை இல்லை. எடுக்கத் தான் உரிமை இருக்கு. நான் உயிரை எடுத்ததும் யாருக்கும் தர மாட்டேன். நீ போ என்று சொல்லி விடுகிறார்.

எமலோகம் வரை சாவித்திரி பின் தொடர்கிறாள். அப்போது எமலோக வாயிலில் வைத்து எமன் கேட்கிறார். உயிரோடு யாரும் இது வரை வந்தது இல்லை. நீ ஏம்மா உயிரோடு இருந்து கொண்டு என் உயிரை வாங்குகிறாய்? உனக்கு என்ன தாம்மா வேணும்னு கேட்கிறார். அதற்கு என் கணவரோட உயிர் தான் வேணும் என்கிறார்.

நீ இவ்ளோ தூரம் வந்துருக்குற…உன் கற்பின் தன்மையை, பூஜையை மதிக்கிறேம்மா…உன் கணவரைத் தவிர வேற எதுவேணாலும் கேளு…நான் தாரேன்னு சொல்லி விடுகிறார் எமன். உடனே சாவித்திரி 2 வரம் கேட்கிறாள். ஏற்கனவே இழந்த ராஜ்ஜியம், மாமனார், மாமியாருக்குக் கண் பார்வை வேண்டும். அப்புறம் நான் மகாமகா பதிவிரதை. அதனால எனக்கு சந்தான பாக்கியம் வேண்டும் என்கிறாள்.

Karadaiyan Nonbu3
Karadaiyan Nonbu3

தந்தேன் என்று சொல்லிவிட்டு உள்ளே போகிறார் எமன். தந்தேன் என்று சொல்லி விட்டு போகிறீர்களே எங்கே தந்தீர்கள் என்று கேட்கிறார். நீ என்ன கேட்டாய் என்று எமன் கேட்கிறார். ஏன்னா அவர் உயிரை எடுத்துக்கிட்டு உள்ளே போற அவசரத்தில் சாவித்திரி என்ன கேட்டாள் என்பதையே கவனிக்கவில்லை. தந்தேன் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். அதனால் தான் நீ என்ன கேட்டாய் என்று கேட்கிறார். முதல் வரமாக இழந்த ராஜ்ஜியம், மாமனார் மாமியாருக்குக் கண்பார்வை என்கிறாள்.

தந்தேன். எடுத்துக்க என்கிறார். அடுத்ததாக சந்தான பாக்கியம் கேட்டேன் என்கிறார். அப்போது தான் யோசிக்கிறார் எமன். இதையா கேட்ட…ஆமாம் என்கிறார். அதாவது குழந்தை பாக்கியம். கணவர் இல்லாம எப்படி குழந்தை பெற முடியும்? என்று யோசிக்கிறார். உடனே அவரது கணவரைக் கொடுத்து விடுகிறார். அப்பேர்ப்பட்ட பதிவிரதை சாவித்திரி.

எமலோகம் வரை சென்று தன் கணவரை உயிருடன் மீட்டவள். அந்த நாள் தான் காரடையான் நோன்பு. இந்த நாளில் இந்த வரலாற்றை நாம் படிக்க வேண்டும்.

இந்த ஆண்டு 15.3.2023 அன்று புதன் கிழமை இந்த காரடையான் நோன்பு வருகிறது. இந்த நோன்புக்கான மஞ்சள் சரடை காலை 6.31 மணி முதல் 6.47 வரை கட்டிக் கொள்ளலாம். இந்தச் சரடை மாற்றும்போது திருமாங்கல்யக் கயிறைக் கூட மாற்றிக் கொள்ளலாம்.

இந்த பூஜைக்குக் கார அடை, வெல்ல அடை செய்ய வேண்டும். ஏனென்றால் சாவித்திரிக்குக் காட்டுல காரமணிப் பயிறு போன்ற எளிமையான பொருள்கள் தான் கிடைச்சது. அதை வைத்துத் தான் நைவேத்தியம் செய்து பூஜை செய்தாள். ஒவ்வொரு முறை நைவேத்தியம் செய்யும்போதும் வெல்ல அடை, கார அடையைத் தான் பயன்படுத்தினாள்.

அதையும் நாம் செய்து உருகாத நெய் வைத்து அம்பிகைக்கு நைவேத்தியம் வைக்க வேண்டும். அத்துடன் வாழைப்பழம், வெத்தலைப்பாக்கு வைத்து வழிபடலாம். சரடை 2 விதமாகக் கட்டலாம். கல்யாணம் ஆனவர்களும் கட்டலாம். கல்யாணமாகாதவர்களும் நல்ல வரன் கிடைக்க வேண்டும் என்று நினைத்து வேண்டிக் கட்டலாம்.

காமாட்சி, மீனாட்சி போட்டோ இருந்தால் அலங்காரம் செய்து தன் கணவர் தீர்க்க ஆயுளோடு இருக்கணும் என்று வழிபடுங்க. அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று அம்பாளை வழிபடுங்க. வீட்டுலேயே குங்கும அர்ச்சனை செய்து அம்பிகையை வழிபடலாம்.

உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் நூற்றேன். ஒருக்காலும் என் கணவர் என்னை விட்டு பிரியாதிருக்க வேண்டும் என்ற மந்திரத்தை சொல்லி நோன்பு இருக்கலாம். நோன்பு இல்லாதவர்களும் இந்த மந்திரத்தைச் சொல்லலாம்.