பெரும்பாலும் வாழ்க்கையில் கடன் தொல்லையால் பாதிகப்படுபவர்கள் தான் அதிகமானோர் இருப்பார்கள்.
கடன் என்பது ஏழைக்கும், பணக்காரருக்கும் பொதுவானது. ஏழை அவனுக்குத் தக்கபடி கடன் வாங்குவான். பணக்காரன் அவன் தகுதிக்கேற்ப கடன் வாங்குகிறான். அதனால் கடன் தொல்லை எல்லோருக்கும் உண்டு. கடன் சுமையைக் குறைக்க என்ன செய்யலாம் என்று இங்கு பார்ப்போம்.
இதை செய்தால் கடன் அடைந்து விடும் என்று ஏதாவது ஒரு வழிபாடு உள்ளதா என்று எல்லோரும் பார்ப்பார்கள். கடனை அடைக்க ஏதாவது மார்க்கம் உண்டா என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.
கடனுக்கு உண்டான உழைப்பு, சிக்கனம் நமக்குக் கண்டிப்பாகத் தேவை. அதை அடைப்பதற்கு உண்டான வழியையும் தேட வேண்டும். அதற்கு பிறகு தான் பூஜை. செவ்வாய் ஓரையில் இந்த பூஜையை செய்ய வேண்டும்.
செவ்வாய்க்கிழமையில் செவ்வாய் ஓரை ரொம்பவே விசேஷமானது. அந்த ஓரையும், செவ்வாய்க்கிழமையும் இணைந்து வரும் நேரத்தில் நான் கடனை அடைக்கணும்னு மனமாற வேண்டி பூஜை செய்பவர்களுக்கு இந்த கடன் சுமை நிச்சயமாகக் குறையும்.
செவ்வாய் ஓரை என்பது செவ்வாய்க்கிழமை அன்று காலையில் 6 மணி முதல் 7 மணி வரை வரும். பாசிப்பருப்பினால் செய்யப்பட்ட வெல்லம் கலந்த பாயாசம். பச்சைப்பயறு பாயாசம் தான் இது.
இதைக் காலையிலேயே செய்து வீட்டில் உள்ள கடவுளுக்கு நைவேத்தியம் செய்து எங்களுக்குக் கடனை அடைக்கக் கூடிய மார்க்கத்தைக் காட்டு என நம் குல தெய்வம், இஷ்ட தெய்வத்தை வணங்கி வழிபடலாம்.
செவ்வாய்க்கிழமை அன்று மதியம் 1 மணி முதல் 2 மணி வரை மீண்டும் செவ்வாய் ஓரை வருகிறது. இந்த நேரத்தில் பசுமாட்டிற்கு ஒரு உணவு தயாரித்துக் கொடுக்க வேண்டும்.
நல்ல பச்சரிசியைக் கழுவி சுத்தம் செய்து வைங்க. அதில் பாசிப்பருப்பு, வெல்லம் கலந்து நம் வீட்டு பூஜை அறையில் வைத்து பசுவிற்கு தானம் செய்து நம் கடன் தீர வேண்டும் என மனமாற வேண்டிக் கொண்டு பசுமாட்டிற்கு தானம் செய்யுங்க.
வேண்டும்போது முப்பத்து முக்கோடித் தேவர்களும் எனக்குக் கடன் அடைப்பதற்கு அனுக்கிரகம் செய்யுங்க. எங்க வீட்டுக் கடன் அடையணும் அப்படின்னு வேண்டுங்க.
அடுத்து 3வதாக இந்தவழிபாடு நிச்சயம் நமக்குப் பலன் கிடைக்கும். மாலை 6 மணிக்கு மேல் நம் வீட்டில் நெய் தீபம் ஏற்றி வைத்து முருகப்பெருமானை வேண்டிக் கொள்ளுங்கள். முருகா கடனை அடைப்பதற்கு உண்டான வழியை எங்களுக்குக் காட்டு என்று வேண்டுங்கள்.
பெருமாளை வழிபடுபவர்கள் பெருமாளையும் வழிபடலாம். இதில் பேதைமை எதுவும் இல்லை. வழிபாட்டிற்கு பேதைமை என்பது கிடையாது.
பொதுவாக நைவேத்தியம் பண்ணின உணவை தானமும் கொடுக்கலாம். நாமும் சாப்பிடலாம். இந்த வழிபாட்டை நாம் தொடர்ந்து செய்யலாம். இப்படி செய்து வரும்போது உங்களுக்கு நிச்சயம் பலன் கொடுக்கும்.