ஏ சான்றிதழ் பெற்ற திரைப்படங்களை சிறுவர்கள் பார்க்கலாமா? ஐகோர்ட் ஆணை!!

By Vetri P

Published:

நாளுக்கு நாள் தமிழ் சினிமாவில் திரைப்படங்களின் வரத்தானது அதிகரித்துக் கொண்டே காணப்படுகிறது, வாரம் வெள்ளிக்கிழமை ஆனால் திரையரங்கில் ஏதேனும் புது படம் வெளியாகும் என்பது போல் திரைப்படங்களின் புதுவரவுகள் காணப்படுகிறது.

அதிலும் குறிப்பாக முன்பெல்லாம் தணிக்க குழுவின் சார்பில் பெரும்பாலான படங்களுக்கு யூ என்ற சான்றிதழே அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது வெளியாகும் பல படங்களில் யூ/ஏ சான்றிதழ் பெற்றே வெளியாகிறது.

அதிலும் ஒரு சில படங்கள் A சான்றிதழ் பெற்று வெளியாகிறது. இந்த ஏ சான்று படம் தொடர்பாக ஐகோர்ட் சில ஆணையினை பிறப்பித்துள்ளது. அதன்படி ஏ சான்றிதழ் பெற்ற படங்களை சிறார் பார்க்க அனுமதிப்பதை தடுக்க கோருவது பற்றி பரிசிலித்து முடிவெடுங்கள் என்று ஹைகோர்ட் ஆணை பிறப்பித்துள்ளது.

மத்திய அரசின் பெண்கள் குழந்தைகள் மேம்பாட்டு துறை திரைப்பட தணிக்கை வாரியம் பரிசிலித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏ சான்றிதழ் பெற்ற திரைப்படங்களை சிறுவர்களை பார்க்க அனுமதிப்பது என்பது திரை இடுதல் சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தணிக்கை வாரியத்திற்கு ஆணை பிறப்பித்துள்ளது.