தமிழகத்தில் மீண்டும் கனமழையா? நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு!

Published:

இந்திய பெருங்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னால் வடகிழக்கு பருவமழை முடிவடைந்ததை அடுத்து தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு மையம் தோன்றியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்த காற்றழுத்த தாழ்வு மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெறும் என்றும் இதனால் தமிழக மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

ஜனவரி 29, 30, 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தினங்களில் தமிழகம் மற்றும் புதுவை ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் காற்றழுத்த தாழ்வு வலுப்பெறும் வகையை பொருத்து தான் கன மழை பெய்யுமா என்பதை கணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் ஏற்கனவே வடகிழக்கு பருவமழை பெய்ததால் அனைத்து நீர் நிலைகளும் கிட்டத்தட்ட நிரம்பியுள்ள நிலையில் மீண்டும் ஒரு கன மழை பெய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் உங்களுக்காக...