மகரம் பிப்ரவரி மாத ராசி பலன் 2023!

மகர ராசிக்கார்களைப் பொறுத்தவரை ஜென்ம சனி விலகினாலும் பாத சனியின் பார்வையால் என்னென்ன பலன்கள் ஏற்படும் என்று பார்க்கலாம். 4 ஆம் இடத்தில் ராகு, 5 ஆம் இடத்தில் செவ்வாய் என கிரகங்களின் இட…

magaram

மகர ராசிக்கார்களைப் பொறுத்தவரை ஜென்ம சனி விலகினாலும் பாத சனியின் பார்வையால் என்னென்ன பலன்கள் ஏற்படும் என்று பார்க்கலாம். 4 ஆம் இடத்தில் ராகு, 5 ஆம் இடத்தில் செவ்வாய் என கிரகங்களின் இட அமைவு உள்ளது.

சுக்கிரன்- சனி கூட்டணியால் பணவரவு அதிகரிக்கும். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை புது வேலைக்கு முயற்சிக்காமல் இருக்கும் வேலையினைத் தக்கவைத்துக் கொள்ளுதல் நல்லது. கடன் பிரச்சினை, பணப் பிரச்சினைக்கு முடிவு கிடைக்கும் காலமாக இருக்கும்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை பெரிய அளவில் இடையூறுகள் இல்லை. ஏழரைச் சனி காலத்தில் திருமணம் செய்வதால் எதையும் பொறுமையுடன் கையாளுதல் வேண்டும்.

குரு பார்வை 7 ஆம் இடத்தின் மேல் விழுகின்றது. குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை பேசாமல் இருந்தால் பிரச்சினை எதுவும் கிடையாது. பேசப் பேச பிரச்சினைகள் அதிகமாகும்.

மாணவர்களைப் பொறுத்தவரை கல்விரீதியாக மந்தநிலையில் இருந்து மாறுவீர்கள். மனம் புத்துணர்ச்சி நிறைந்து காணப்படும். இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை மன வெறுமை நிறைந்து காணப்படுவீர்கள்.

உடல் ஆரோக்கியம்ரீதியாக இதுவரை இருந்த பிரச்சினைகளில் இருந்து மீள்வீர்கள். மருத்துவ செலவுகள் குறையும். ஆசைப்பட்ட பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தோடு சுற்றுலா செல்வீர்கள்.