கும்பம் பிப்ரவரி மாத ராசி பலன் 2023!

Published:

2 ஆம் இடத்தில் குரு பகவான் உள்ளார், வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை பெரிய அளவில் மாற்றம் எதையும் எதிர்பார்க்காதீர்கள்.

புது வேலைக்கு முயற்சிக்காமல் இருக்கும் வேலையினைத் தக்க வைத்துக் கொள்ளுதல் நல்லது. வேலை செய்யும் இடங்களில் சக ஊழியர்கள் மற்றும் மேல் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

தொழில் வாழ்க்கையினைப் பொறுத்தவரை பணப் புழக்கம் குறைவாக இருக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு நஷ்டத்தில் இருந்து மீள்வீர்கள். எடுக்கும் ஒவ்வொரு புது முயற்சியிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுதல் நல்லது.

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை மன அழுத்தம், டென்ஷன் என மனரீதியான உளைச்சல்கள் ஏற்படும். கணவன்- மனைவி இடையே பிரச்சினை தரும் விஷயங்களைப் பேசாமல் தவிர்த்துவிடுதல் நல்லது.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை சுப காரியங்கள் நடக்கும் மாதமாக இருக்கும். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். மாணவர்களைப் பொறுத்தவரை கடந்த காலங்களில் இருந்த மன வருத்தம் சரியாகும். உங்களின் திறமைகளை உணர்ந்து கடின உழைப்பினைப் போடுவீர்கள்.

உடல் ஆரோக்கியம் என்று கொண்டால் தந்தையின் உடல் நலனில் அக்கறை தேவை, வீண் விரயச் செலவாக மருத்துவச் செலவு ஏற்படும்.

மேலும் உங்களுக்காக...