தனுசு பிப்ரவரி மாத ராசி பலன் 2023!

தனுசு ராசியினைப் பொறுத்தவரை சனி பகவான் 3 ஆம் இடத்தில் உள்ளார், சுக்கிரன் உச்சம் பெற்றுள்ளார். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை வேலை மாற்றம், இடமாற்றம், பதவி உயர்வு, சம்பள உயர்வு, பாராட்டுகள் என அனைத்தும் நிறைவேறும்…

dhanusu

தனுசு ராசியினைப் பொறுத்தவரை சனி பகவான் 3 ஆம் இடத்தில் உள்ளார், சுக்கிரன் உச்சம் பெற்றுள்ளார். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை வேலை மாற்றம், இடமாற்றம், பதவி உயர்வு, சம்பள உயர்வு, பாராட்டுகள் என அனைத்தும் நிறைவேறும் காலமாக இருக்கும்.

மாற்றங்கள் மரியாதையுடன் கூடிய அங்கீகாரமாக இருக்கும். வேலை செய்யும் இடங்களில் சாதகமான சூழல் இருக்கும். தொழில் வாழ்க்கையினைப் பொறுத்தவரை புதுத் தொழில் துவங்குதல், தொழிலை அபிவிருத்தி செய்தல் போன்ற விஷயங்களில் ஆர்வம் காட்டுவீர்கள்.

திருமண வாழ்க்கையினைப் பொறுத்தவரை இதுவரை தடைகளால் தள்ளிப் போய் இருக்கும்; தற்போது முகூர்த்த தேதியினைக் குறித்து திருமண காரியங்களை விறுவிறுவென செய்யலாம்.

வண்டி, வாகனங்கள் புதிதாக வாங்கும் சூழல் உண்டு. காதலர்களுக்குள் இருந்த கருத்து மோதல்கள் சரியாகும். மாணவர்களைப் பொறுத்தவரை இதுவரை இருந்த மந்தநிலை சரியாகும்.

இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை வீட்டின் பழைய பொருட்களைப் புதுப்பிப்பீர்கள். குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையேயான கருத்து வேறுபாடுகள் சரியாகும்.

உறவினர்களால் உதவிகள் கிடைக்கப் பெறும், கடனை அடைத்து சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.