மழை அவ்வளவு தான்.. இனிமேல் வெயில் தான்.. வானிலை அறிக்கை

By Bala Siva

Published:

வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மழை பெய்து வந்தது என்பதும் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இதனால் நீர்நிலைகள் நிரம்பி உள்ளன என்பதும் தெரிந்ததே.

மழை காரணமாக பள்ளி கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டது முதல் பயிர்கள் சேதம் ஆனது வரை பல்வேறு பிரச்சனைகள் எழுந்தது என்பதும் ஆனால் அதே நேரத்தில் மத்திய மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கை எடுத்து மக்களை காப்பாற்றினார்கள் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் மழை சீசன் முடிந்து விட்டதாகவும் இனி வறண்ட வானிலையே காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மாவட்டங்களில் மட்டும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் மற்றபடி வடமாவட்டங்களில் வறண்ட வானிலையே காணப்படும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் ஜனவரி இறுதியில் இருந்து நல்ல வெயில் தொடங்கிவிடும் என்றும் எனவே வெயிலை சந்திக்க மக்கள் தயாராக வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1 முதல் 3 வரை தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அதிகபட்ச வெப்ப நிலையாக 30 முதல் 32 டிகிரி வரை இருக்கும் என்றும் எனவே மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.