லஞ்சம் வாங்கி நகர்மன்ற தலைவருக்கு கொடுத்தேன். ‘வண்டுமுருகன்’ பாணியில் கூறிய கவுன்சிலர்

Published:

திமுக கவுன்சிலர் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் லஞ்சம் வாங்கியது உண்மைதான் என்றும் ஆனால் நான் எனக்காக வாங்கவில்லை என்றும் நகர்மன்ற தலைவர் வாங்க சொன்னதால் தான் வாங்கி அவரிடம் அந்த லஞ்ச பணத்தை கொடுத்தேன் என்றும் திமுக கவுன்சிலர் ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கவுன்சிலர் சத்தியசீலன் என்பவர் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்த விசாரணையில் லஞ்சம் வாங்கியது உண்மைதான் என்றும் ஆனால் நான் எனக்காக வாங்கவில்லை என்றும் நகர்மன்ற தலைவர் பரிமளா வாங்க சொன்னதால் தான் வாங்கினேன் என்றும் அந்த லஞ்ச பணத்தை அப்படியே அவரிடம் கொடுத்துவிட்டேன் என்றும் அதிலிருந்து அவர் எனக்கு 5000 ரூபாய் கமிஷன் தந்ததாகவும் கூறியுள்ளார்.

இந்த பிரச்சனை நகர்மன்ற கூட்டத்தில் பெரும் பிரச்சனையாக வெடித்ததை அடுத்து சொந்த கட்சி கவுன்சிலரே நகர் மன்ற தலைவரை போட்டு கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடிவேலுவின் வண்டு முருகன் காமெடி போல் திடீர் திருப்பம் ஏற்பட்ட இந்த விஷயத்தில் விசாரணை கமிஷன் அமைத்து விசாரணை செய்ய வேண்டும் என கவுன்சிலர்கள் வலியுறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் உங்களுக்காக...